டாடா ஆஸ்பிரே மினி எஸ்யூவியின் 'ஸ்பை' படங்கள் வெளியானது

By Saravana

முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கியிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி. மஹாராஷ்டிராவில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வைத்து இந்த புதிய எஸ்யூவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து முதல் மினி எஸ்யூவியாக வரும் டாடா நெக்ஸான் குறித்த பல புதிய தகவல்களையும், ஸ்பை படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

பெயர்

பெயர்

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா நெக்ஸான் என்ற கான்செப்ட் மாடல்தான் தற்போது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது ஆஸ்பிரே என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் நிர்வாகத்தின் ஊடாக, எக்ஸ்104 என்ற குறியீட்டுப் பெயரில் குறிப்பிடுகிறது.

Image Via Autocolumn.com

அதிக வேறுபாடு

அதிக வேறுபாடு

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா நெக்ஸான் கான்செப்ட் மாடலுக்கும், தற்போது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டிருக்கும் மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. இதனை டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஏற்கனவே கூறியிருந்தது.

Image Via Autocolumn.com

கம்பீரமான மாடல்

கம்பீரமான மாடல்

4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவி, கான்செப்ட் மாடல் போன்று கச்சிதமாக தெரியவில்லை. ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும் அளவுக்கு, அகலம், உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் நினைத்ததை விட பிரம்மாண்டமாக தெரிகிறது.

Image Via Autocolumn.com

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் டாடா ஸீக்கா கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, டாடா ஸீக்கா காரின் பானட், வீல் ஆர்ச்சுகள் போன்றவை ஒன்றாகவே இருக்கிறது.

Image Via Autocolumn.com

இன்டீரியர்

இன்டீரியர்

வெளிப்புறத்தைவிட உட்புறத்தில் டாடா ஸீக்கா காரின் பல பாகங்களை இந்த மினி எஸ்யூவி பங்கிட்டுக் கொண்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல் போன்ற அனைத்தும் டாடா ஸீக்கா காரின் பாகங்களை இது பங்கிட்டுக் கொண்டுள்ளது.

Image Via Autocolumn.com

இடவசதி

இடவசதி

இந்த காரின் மிக முக்கிய அம்சமாக, பிற டாடா கார்களை போன்றே, மிக தாராளமான இடவசதி கொண்ட மாடலாக இருக்கும் என்று நம்பலாம். அதாவது, நேரடி போட்டியாளரான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி மாடல்களைவிட அதிக இடவசதி கொண்டதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினும், புதிய 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சினும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் தவிர்த்து, நிச்சயமாக ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் வரும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இதன் பரிமாணங்களை வைத்து கணக்கிடும்போது, ரூ.7 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

அறிமுகம்

அறிமுகம்

வரும் பிப்ரவரி மாதம் டாடா ஆஸ்பிரே எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் காட்சிக்கு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இந்த எஸ்யூவி பற்றி ஓர் முழுமையான அனுமானத்திற்கு வர முடியும்.

Article Published On: Monday, December 7, 2015, 12:29 [IST]
English summary
Tata Osprey compact suv was testing around Tata Motors factory in Maharashtra. The Spy Pictures of this SUV was revealed recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+