2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் படங்கள் லீக்கானது... அந்த முறைப்பு போச்சே!!

By Saravana

பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டின் முடிசூடா அரசனாக வலம் வருகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர். அந்த கம்பீரமான டிசைன் வாடிக்கையாளர்களை வேறு மாடல்கள் பக்கம் திரும்ப விடாமல், சுண்டி இழுத்து வருகிறது. அதன் முகப்பின் முறைப்பும், விரைப்புமாக பார்ப்பவர்களை மிரட்டும்.

இந்த நிலையில், டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் தயாராகிவிட்டது. அடுத்த வாரம் உலக அளவிலான அறிமுகத்துக்கு வளர்ந்து ஆளாகி நிற்கும், புதிய டொயோட்டா ஃபார்ச்சூனரின் படங்கள் இணையதளங்களில் கசிந்திருக்கின்றன. தாய்லாந்தில் எடுக்கப்பட்ட அந்த படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முறைப்பு போச்சே...

முறைப்பு போச்சே...

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலின் முகப்பு டிசைன் மிக கம்பீரமாக காட்சி தரும். சாலையில் ஆஜானுபாகுவாக செல்லும். ஆனால், புதிய மாடலின் முகப்பு அந்த கம்பீரத்தை இழந்து விட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஏனெனில், ஹெட்லைட்ஸ், க்ரில் அமைப்பு ஆகியவை இந்த எஸ்யூவின் முகப்பின் கம்பீரத்தை மென்மையாக காட்டுகிறது. பக்கவாட்டிலும், பின்புற டெயில் லைட் டிசைனும் கூட மிக மென்மையான தோற்றத்தை புதிய ஃபார்ச்சூனருக்கு வழங்குகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் புதிய கரொல்லா ஆல்டிஸ் மாடலின் டேஷ்போர்டு அமைப்பை ஒத்ததாக தெரிகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனரின் டேஷ்போர்டு. பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சென்டர் கன்சோலில் ஆட்சி செய்கிறது. டாப் வேரியண்ட்டில் லெதர் இருக்கைகள் மற்றும் 4 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல் ஆகியவை இடமபெறும். புதிய ஃபார்ச்சூனரின் மூன்றாவது வரிசை இருக்கை கூடுதல் இடவசதி கொண்டதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் இரண்டு வித டீசல் எஞ்சின் இடம்பிடிக்க உள்ளது. இப்போதுள்ள 2.5 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக, புதிய 2.4 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் இடம்பிடிக்க உள்ளது. இதேபோன்று, தற்போதைய 3.0 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

விரைவில் உலகளாவிய தரிசனத்துக்கு தயாராகி நிற்கும் இந்த புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புதிய ஃபோர்டு எண்டெவர், புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் ஆகிய மாடல்களுடன் இந்த புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டி போடும். சிறப்பம்சங்கள், இடவசதி, டிசைன் என அனைத்திலும் புதிய தலைமுறை மாடலாக வர இருக்கிறது புதிய ஃபார்ச்சூனர்.

Article Published On: Saturday, July 11, 2015, 15:03 [IST]
English summary
The 2016 Toyota Fortuner have been captured sans disguise in Thailand ahead of its expected world premiere next week.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+