21 கன் சல்யூட் விண்டேஜ் கார் ராலியின் மீடியா பார்ட்னராக டிரைவ்ஸ்பார்க் அறிவிப்பு
டெல்லியில் நடைபெற இருக்கும், 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் ராலியின் மீடியா பார்ட்னராக டிரைவ்ஸ்பார்க் தளம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் 21 மற்றும் 22 தேதிகளில் 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் ராலி டெல்லியிலிருந்து குர்கான் வரை 52 கிமீ தூரத்துக்கு அணிவகுப்பு நடக்க இருக்கிறது. 5வது முறையாக நடைபெற இருக்கும் இந்த விண்டேஜ் கார்களுக்கான அணிவகுப்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரம்பரியமிக்க விண்டேஜ் கார்கள் அணிவகுக்க உள்ளன.

இந்த விண்டேஜ் கார் அணிவகுப்பில் வெளிநாடுகளை சேர்ந்த விண்டேஜ் கார் ராலி அமைப்புகளும் பங்கேற்ப இருப்பதால், இது சர்வதேச அந்தஸ்துடனான நிகழ்வாக அமைய இருக்கிறது. இந்த நிலையில், இந்தமுறை 201 விண்டேஜ் கார்களும்,50 விண்டேஜ் மோட்டார்சைக்கிள்களும் பங்கேற்க உள்ளன.
மலேசிய சிங்கப்பூர் விண்டேஜ் கார் கிளப் இந்த நிகழ்வில் பங்கேற்க இருப்பதை உறுதி செய்துள்ளது. இதேபோன்று, இங்கிலாந்து, இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்டேஜ் கார் அமைப்புகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், நாட்டின் மிகவும் மதிப்புமிக்க இந்த கார் அணிவகுப்பின் மீடியா பார்ட்னராக டிரைவ்ஸ்பார்க் தளம் அறிவிக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மேலும், இந்த விண்டேஜ் கார் அணிவகுப்பின் பிரத்யேக செய்திகளையும் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் நிருபர்கள் மூலம் வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
இந்த நிகழ்வையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை இந்த இணைப்பை க்ளிக் செய்து பெறலாம்.
செவர்லே என்ஜாய் காரின் சென்னை ஆன்ரோடு விலை!


Click it and Unblock the Notifications








