வீட்டிலேயே கார் டீட்டெயிலிங் சேவையை வழங்கும் 3எம் கார் கேர் நிறுவனம்!

By Saravana

வாடிக்கையாளரின் வீட்டிற்கே வந்து கார் டீட்டெயிலிங் செய்து தரும் புதிய சேவையை 3எம் கார் கேர் நிறுவனம் துவங்கியிருக்கிறது.

நாடு முழுவதும் 1,400 சேவை மையங்கள் மூலமாக கார் டீட்டெயிலிங் எனப்படும் காரை சுத்தப்படுத்துதல் மற்றும் மெருகேற்றும் பணிகளை 3எம் கார் கேர் நிறுவனம் செய்து வருகிறது.

3M Car Care

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வசதியை கருதி, "Store to Door" என்ற பெயரில் புதிய சேவையை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் மூலம் 3எம் கார் கேர் நிறுவனத்தின் பெரும்பாலான கார் டீட்டெயிலிங் சேவைகளை வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே பெற முடியும்.

இதற்குண்டான உபகரணங்கள் பொருத்தப்பட்ட பிக்கப் டிரக் வாகனங்களை 3எம் கார் கேர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த நடமாடும் சேவை மையங்கள் மூலமாக, 3எம் கார் கேர் நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பத்திலான பெயிண்ட் சீலண்ட் மற்றும் ஜெர்ம்க்ளீன் போன்ற சர்வீஸ்களையும் பெற முடியும்.

மேலும், இந்த வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் ஜிபிஆர்எஸ் சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களை விரைவாக அடையக்கூடிய வசதியும் உள்ளது. இந்த நடமாடும் சேவை வாகனத்தில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருப்பார்கள். தவிர, 3எம் நிறுவனத்தின் தர விதிமுறைகளுக்கு உட்பட்ட சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 1, 2015, 9:58 [IST]
English summary
3M Car Care, a unit of the Automotive After Markets Division of 3M India, today launched their door-step service for car care & detailing called ‘Store to Door'.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+