இந்தியாவில் மல்லுக்கட்ட வரிசை கட்டி நிற்கும் 6 புதிய பிரிமியம் எஸ்யூவிகள்!

Written By:

தீபாவளியையொட்டிய பண்டிகை காலத்தில் கார் வாங்குவதற்கு பலரும் திட்டமிடுவது வாடிக்கை. அதில், ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் பிரிமியம் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் சற்று நிதானம் காப்பது நல்லது. ஏனெனில், 6 புதிய எஸ்யூவி மாடல்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. எனவே. சற்று கூடுதலாக காத்திருந்தால், புதிய தலைமுறை மாடலையோ அல்லது புத்தம் புது மாடலையே வாங்கும் வாய்ப்பை பெறலாம்.

எனவே, வாங்கிய சில மாதங்களில் புதிய மாடல் வந்தால், உங்கள் மனது தப்பு செய்துவிட்டோமே என்று ஏங்கும். எனவே, சில மாதங்கள் கூடுதலாக காத்திருந்தால், புதிய மாடலாகவே வாங்கிவிடலாம். அடுத்த சில ஆண்டுகளுக்கு எந்த மன வருத்தமும் இல்லாமல் ஓட்டலாம். எனவே, பிரிமியம் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், இந்த பட்டியலை பார்த்துவிட்டு முடிவு செய்துவிடலாம்.

மாடல் விபரம்

மாடல் விபரம்

ஒவ்வொரு மாடலை பற்றியும் தலா 2 ஸ்லைடுகளில் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிய மாடலின் கூடுதல் விபரங்கள், அதிக படங்களை காண விரும்புவோர்க்கு வசதியாக, அந்தந்த கார் மாடல் குறித்த கூடுதல் தகவல்கள் அடங்கிய செய்தி இணைப்பையும் கொடுத்திருக்கிறோம்.

01. டொயோட்டா ஃபார்ச்சூனர்

01. டொயோட்டா ஃபார்ச்சூனர்

இந்திய பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக வர இருக்கிறது. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செக்மென்ட்டில் சிறந்த எஸ்யூவி மாடலாக இதனை கூறலாம்.

 ஃபார்ச்சூனர் தொடர்ச்சி...

ஃபார்ச்சூனர் தொடர்ச்சி...

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 323 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 180 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க்கையும் அளிக்கும். புதிய ஃபார்ச்சூனர் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது. எஞ்சின்கள் 10 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

கூடுதல் தகவல்களுக்கு...

 02. மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்

02. மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்

பஜேரோ பெயருக்கு தனி மதிப்பு இருக்கிறது. இந்த நிலையில், தாய்லாந்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்றே, அதிக அளவில் டிசைன் மாற்றங்களை சந்தித்திருக்கிறது. மேலும், நவீன வசதிகள் பலவும் இந்த எஸ்யூவியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

பஜேரோ ஸ்போர்ட் தொடர்ச்சி...

பஜேரோ ஸ்போர்ட் தொடர்ச்சி...

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியில் 178 எச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.4 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் சூப்பர் செலக்ட் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது.

கூடுதல் தகவல்களுக்கு...

03. ஃபோர்டு எண்டெவர்

03. ஃபோர்டு எண்டெவர்

ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய டிசைன் பிரிவால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஃபோர்டு எண்டெவர் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மாறியிருக்கிறது. பார்ப்பதற்கு கச்சிதமாகவும், நாகரீகமான டிசைன் அமைப்பை பெற்றிப்பதால், நிச்சயம் போட்டியாளர்களுக்கு சவாலாக விளங்கும்.

எண்டெவர் தொடர்ச்சி...

எண்டெவர் தொடர்ச்சி...

தற்போதைய மாடலில் பயன்படுத்தப்படும் 2.5 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின்களுக்கு பதிலாக, புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் வருகிறது. இந்த டீசல் எஞ்சின்கள், முறையே 148 பிஎச்பி மற்றும் 197 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

கூடுதல் தகவல்களுக்கு...

04. நிசான் எக்ஸ் ட்ரெயில்

04. நிசான் எக்ஸ் ட்ரெயில்

இனி பிரிமியம் எஸ்யூவி தேர்வு பட்டியலில் இந்த மாடலும் இடம்பிடிக்கும். முந்தைய தலைமுறை மாடலைவிட பலவிதங்களில் உருமாறியிருக்கும் நிசான் எக்ஸ் ட்ரெயில் விரைவில் இந்தியாவில் களமிறங்குகிறது. ஸ்டைலான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள் என அசத்தலாக வருகிறது. மேலும், சாலை நிலைகளுக்கு தகுந்தாற்போல், தானியங்கி முறையில் மாறிக்கொண்டு சொகுசான பயணத்தை வழங்கும் சஸ்பென்ஷன் அமைப்பையும் பெற்றிருக்கிறது புதிய மாடல். முந்தைய தலைமுறை மாடல் சத்தமில்லாமல், இடத்தை காலி செய்த நிலையில், புதிய மாடல் நிச்சயம் போட்டியாளர்களுக்கு நெருக்கடியை தரலாம்.

 எக்ஸ் ட்ரெயில் தொடர்ச்சி...

எக்ஸ் ட்ரெயில் தொடர்ச்சி...

புதிய நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சினுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். மேலும், இந்த எஸ்யூவி 7 சீட்டர் மாடலிலும் வருவதால், நிச்சயம் போட்டியாளர்களுடன் மல்லுக்கட்டும்.

கூடுதல் தகவல்களுக்கு...

05. ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

05. ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியும் இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வருகிறது.

டிகுவான் தொடர்ச்சி...

டிகுவான் தொடர்ச்சி...

இந்தியாவில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எஞ்சின் சர்வதேச மார்க்கெட்டில் 150பிஎஸ், 190பிஎஸ் மற்றும் 240 பிஎஸ் என மூன்றுவிதமான பவரை அளிக்கும் மாடல்களில் வருகிறது. இதில், ஒரேயொரு ஆப்ஷன் மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு...

 06. செவர்லே ட்ரெயில்பிளேசர்

06. செவர்லே ட்ரெயில்பிளேசர்

இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெறுவதற்காக தீவிர வர்த்தக கொள்கைகளுடன் களமிறங்கியிருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் செவர்லே பிராண்டில் புதிய ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியை விரைவில் களமிறக்க உள்ளது. தீபாவளியையொட்டி வருகை தர இருக்கும் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களர்களுக்கு சிறப்பான தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ட்ரெயில்பிளேசர் தொடர்ச்சி...

ட்ரெயில்பிளேசர் தொடர்ச்சி...

இந்த எஸ்யூவியில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150பிஎஸ் பவரையும், 350என்எம் டார்க்கையும் வழங்கும். மற்றொரு எஞ்சின் ஆப்ஷனான 2.8 லிட்டர் மாடல் அதிகபட்சமாக 180 எச்பி பவரையும், 470 என்எம் டார்க்கையும் கொண்டதாக இருக்கும்.

கூடுதல் தகவல்களுக்கு...

 
English summary
Let's take a look at 7 premium SUVs that are India bound and what they have to offer:

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark