லக்னோவில் மேம்படுத்தபட்ட வாகன தகுதி சோதனை மையம்!!

Written By:

மேம்படுத்தபட்ட வாகன தகுதி பரிசோதனை மையம் லக்னோவில் விரைவில் திறக்கபட உள்ளது.

இதுதான் உத்திர பிரதேசத்தில், முதன் முதலாக அமைக்கபடும் நவீன வாகன தகுதி சோதனை மையமாகும். இந்த புதிய மையம் அடுத்த ஆண்டு மார்ச் மாததிற்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாகன தகுதி பரிசோதனை மையம் 7,500 சதுர மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. கட்டுமான பணிகள் நடை பெற்று கொண்டிருக்கும் நிலையில் இருக்கும் இது, 3 கோடி ரூபாய் செலவில் கட்டபட்டு வருகிறது. மாநில அரசு மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த மையம் கட்டபட்டு வருகின்றது.

இந்த அட்வான்ஸ்ட் வெஹிகிள் ஃபிட்னஸ் செண்டரில் வாகனங்களின் பிரேக் சிஸ்டம், மாசு உமிழ்வு அளவு, இஞ்ஜினின் செயல்பாடுகள் குறித்த அம்சங்கள் ஆய்வு செய்யபடும்.

இங்கு கமர்ஷியல் வாகனங்களுக்கும் பரிசோதனைகள் நடத்தபடுகிறது. கம்ர்ஷியல் வாகனங்களுக்கு, ஆண்டிற்கு ஒரு முறை தகுதிச் சான்று பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது.

தற்போதைய நிலையில், இந்த பரிசோதனைகள் மேனுவல் முறையில் தான் செய்யபடுகிறது. இதனால், அதிக அளவிலான நேரம் வீணாகிறது. மேம்படுத்தபட்ட வாகன தகுதி பரிசோதனை மையம் முழு செயல்பாட்டிற்கு வரும் நிலையில், நேரம் அதிகம் மிச்சமாகும்.

Advanced Vehicle Fitness Centre To Open In Lucknow in 2016

சாலையில் இயக்க தகுதி இல்லாத வாகனங்கள் தான் அதிக அளவிலான காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு மற்றும் சாலை விபத்துகளுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. தகுதியில்லாத வாகனங்கள் அதிக அளவில் இயக்கபடுவதால், லக்னோ ஆர்.டி.ஓ அலுவகத்தால், ஒரு மாதத்திற்கு மட்டும் சுமார் 400 வாகனங்கள் கைபற்ற படுகின்றன.

இந்த புதிய அட்வான்ஸ்ட் வெஹிகிள் ஃபிட்னஸ் செண்டர் லக்னோவில் அமைக்கபடுவதால், இனி வாகன போக்குவரத்து நடவடிக்கைகள் அதிக அளவில் மேம்படும் என எதிர்பார்க்கலாம்.

இத்தகைய, அட்வான்ஸ்ட் வெஹிகிள் ஃபிட்னஸ் செண்டர்கள் அமைக்கபடும் 10 இந்திய நகரங்களில், லக்னோவும் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

English summary
Advanced vehicle fitness centre under construction in Lucknow will open soon. This will be the first of its kind in the state and construction is under full swing. The new advanced vehicle fitness centre will be ready by March 2016.
Story first published: Monday, November 16, 2015, 14:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark