பெங்களூரில் அவிக்னா ஏடிவி வாகனங்கள் அறிமுகம் - விபரம்

Written By:

பெங்களூரில், அவிக்னா மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் புதிய ஏடிவி வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வாகனங்களுக்கான புதிய ஷோரூமின் திறப்பு விழாவும் நேற்று நடந்தது.

பல்வேறு வகையிலான விசேஷ வாகனங்களை அவிக்னா மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வாகன வகைகள்

வாகன வகைகள்

கரடுமுரடான சாலைகளுக்கும், மணற்பாங்கான இடத்திற்கும் ஏற்ற ஏடிவி வாகனங்கள், எலக்ட்ரிக் கோல்ஃப் கார்ட்டுகள், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஆம்பிபியஸ் வாகனங்கள், விவசாய பயன்பாட்டு வாகனங்கள் என பல்வேறு வகைகளில் வாகனங்களை அவிக்னா களமிறக்கியிருக்கிறது.

மாடல்கள்

மாடல்கள்

அவிக்னா மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 125சிசி முதல் 500சிசி வரையிலான வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மேலும், முன்பதிவு அடிப்படையில், 1,200சிசி வாகனங்களையும் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விலை

விலை

ரூ.1.5 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான விலையில் அவிக்னா ஏடிவி வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

 பாதுகாப்பு கவசங்கள்

பாதுகாப்பு கவசங்கள்

மோட்டார் பந்தயங்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உடுப்புகளும் இங்கு விற்பனைக்கு கிடைக்கும். அவை ரூ.25,000 முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

அசெம்பிள்

அசெம்பிள்

பெங்களூரை சேர்ந்த அவிக்னா மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், தமது வாகனங்களுக்கான உதிரிபாகங்களை வெளிநாட்டில் இருந்து தருவித்து பெங்களூரில் அசெம்பிள் செய்வதாக தெரிவித்துள்ளது.

ஷோரூம் முகவரி

ஷோரூம் முகவரி

பிரஸ்டீஜ் காப்பர் ஆர்க்,

இன்ஃபேன்டரி ரோடு,

பெங்களூர்.

 
English summary
Avigna Motor Sports has launched a range of All Terrain Vehicles (ATV) in Bangalore, along with a showroom.
Story first published: Tuesday, August 25, 2015, 9:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark