இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்... மாருதி 800 சாதனையை முறியடித்த ஆல்ட்டோ!!

By Ravichandran

இந்தியாவில் அதிகம் விற்பனையாகியுள்ள கார் என்ற சாதனையை மாருதி சுசுகி ஆல்டோ படைத்துள்ளது.

மாருதி நிறுவன தயாரிப்புகளுக்கு, இந்திய மக்களிடம் என்றுமே ஒரு தனி இடம் உண்டு. அதில், மாருதி 800 மற்றும் மாருதி சுசுகி ஆல்ட்டோ கார் மாடல்கள் இந்தியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், மாருதி 800 காரைவிட குறைவான கால அளவில் இந்த சாதனையை படைத்திருக்கிறது. மாருதி ஆல்ட்டோ காரின் மறுபக்கத்தை ஸ்லைடரில் காணலாம்.

மாருதி 800 அறிமுகம்;

மாருதி 800 அறிமுகம்;

மாருதி சுசுகி 800 கார் 1983-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது. அப்போது முதல், ஜனவரி 2014 வரை மாருதி 800 கார் விற்பனையில் இருந்தது. இந்தியாவின் நடுத்தர குடும்பங்களில் கார் வாங்க நினைக்கும் அனைவரின் முதல் தேர்வாக மாருதி 800 காரே விளங்கியது. மாருதி நிறுவனம், பிஎஸ்-4 மற்றும் யூரோ-4 எனப்படும் மாசு உமிழ்வு தடுப்புக்கான தரத்திற்கு, தங்களின் மாருதி 800 காரை மேம்படுத்த முயற்சிக்காததும், அது விளக்கி கொள்ளபட காரணமாக விளாங்கியது.

மாருதி 800 சாதனை;

மாருதி 800 சாதனை;

அறிமுகமான சமயம் முதல், உற்பத்தி மற்றும் விற்பனையில் இருந்த சமயம் வரை மாருதி 800 முடி சூடா மன்னன் போலவே விளங்கியது. மாருதி 800 மாடலில், 28 லட்சத்திற்கும் கூடுதலான கார்கள் விற்பனையானது. பின்னர், கடுமையான மாசு உமிழ்வு தடுப்பு தொடர்பான நடைமுறைகள், அமலுக்கு வந்தது. 2010 ஏப்ரலில் மாருதி 800 உற்பத்தியை குறைத்து கொள்ள துவங்கிய மாருதி நிறுவனம், கடைசியாக ஜனவரி 2014-ல் மாருதி 800 காரின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. குறைவான விலையில், நல்ல தரத்துடன் கிடைத்ததால், மக்கள் மாருதி 800 காரை இன்னும் அதிகமாக விரும்பினார்கள் என்பதும் உண்மையாகும்.

மாருதி 800 அம்சங்கள்;

மாருதி 800 அம்சங்கள்;

மாருதி 800 காரின் நீளம் - 3,335 மில்லிமீட்டர்

மாருதி 800 காரின் அகலம் - 1,440 மில்லிமீட்டர்

மாருதி 800 காரின் உயரம் - 1,405 மில்லிமீட்டர்

796 சிசி, எஃப் 8 இஞ்ஜின் கொண்ட இது, 4-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. லிமிடெட் எடிஷன் மாடலில் 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் இருந்தது.

இது லிட்டருக்கு சுமார் 15.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

மாருதி 800 கார், 45 பிஹெச்பி மற்றும் 57 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டதாகும்.

5 பேர் பயணம் செய்யகூடிய வசதி கொண்ட மாருதி 800 காரானது, நின்ற நிலையில் இருந்து, 0 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 21.09 நொடிகளில் எட்ட முடியும். இதில், அதிகபடியாக மணிக்கு, 140 கிலோமீட்டர் வேக்ததில் பயணிக்க முடியும்.

மாருதி ஆல்டோ அறிமுகம்;

மாருதி ஆல்டோ அறிமுகம்;

மாருதி ஆல்டோ என்பது, ஐந்தாம் தலைமுறை ஆல்டோ காராகும். இந்திய சந்தைக்காக மாருதி சுசுகியால் வடிவமைக்கப்பட்ட இந்த கார், 27 செப்டம்பர் 2000-த்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி ஆல்டோ 800 அம்சங்கள்;

மாருதி ஆல்டோ 800 அம்சங்கள்;

மாருதி ஆல்டோ 796 சிசி, எஃப்8டி இஞ்ஜின் கொண்டுள்ளது.

மாருதி ஆல்டோ 800 காரின் நீளம் - 3395 மில்லிமீட்டர்

மாருதி ஆல்டோ 800 காரின் அகலம் - 1475 மில்லிமீட்டர்

மாருதி ஆல்டோ 800 காரின் உயரம் - 1475 மில்லிமீட்டர்

மாருதி ஆல்டோ 48 பிஹெச்பியை-யும், 69 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மாருதி ஆல்டோ 800, லிட்டருக்கு (பெட்ரோல்), 22.74 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

இது, நின்ற் நிலையில் இருந்து, 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 20 நொடிகளில் எட்டி விடுகிறது. மாருதி ஆல்டோ 800, மணிக்கு 137 கிலோமீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

மாருதி ஆல்டோ கே10 அறிமுகம்;

மாருதி ஆல்டோ கே10 அறிமுகம்;

மாருதி ஆல்டோ கே10, ஆல்டோ காரின் மேம்படுத்தபட்ட வடிவம் ஆகும். இது 3, நவம்பர் 2014-ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யபட்டது.

தொழில்நுட்ப ரீதியாக, இதில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இதன் எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியர் அம்சங்கள் பல்வேறு வகையில் மேம்படுத்தபட்டுள்ளது.

மாருதி ஆல்டோ கே10 அம்சங்கள்;

மாருதி ஆல்டோ கே10 அம்சங்கள்;

மாருதி ஆல்டோ கே10 காரின் நீளம் - 3545 மில்லிமீட்டர்

மாருதி ஆல்டோ கே10 காரின் அகலம் - 1490 மில்லிமீட்டர்

மாருதி ஆல்டோ கே10 காரின் உயரம் - 1475 மில்லிமீட்டர்

மாருதி ஆல்டோ கே10, எடை குறைவான 1 லிட்டர் கே-நெக்ஸ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 68 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 90 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஒரு லிட்டருக்கு (பெட்ரோல்), சுமார் 24.07 கிலோமிட்டர் மைலேஜ் வழங்குகிறது. இது ஆட்டோ கியர்-ஷிஃப்ட் வசதி, 5 மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டுள்ளது.

நின்ற நிலையில் இருந்து, 60 கிலோமிட்டர் வரையிலான வேகத்தை, இது 5.3 நொடிகளில் எட்டி விடுகிறது.

மாருதி ஆல்டோவின் சாதனைகள்;

மாருதி ஆல்டோவின் சாதனைகள்;

மாருதி 800 போன்றே, மாருதி ஆல்டோவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

மாருதி 800 கார்கள், டிசம்பர் மாதம் 1983-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யபட்ட நாளில் இருந்து, 29 ஆண்டு காலத்தில், 28 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்று சாதனை படைத்தது.

அதே சாதனையை, ஆல்டோ கார்கள் செப்டம்பர் 2000-த்தில் அறிமுகம் செய்யபட்ட சமயத்தில் இருந்து, அக்டோபர் 2015 என்ற 15 ஆண்டுகள் காலகட்டத்தில், சரியாக 29,19,819 கார்கள் விற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

சாதனைக்கான காரணங்கள்;

சாதனைக்கான காரணங்கள்;

இந்த அபாரமான சாதனைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. காரின் முதலீடுகள் முதல் சர்வீஸ் செண்டர்கள் வரை பல்வேறு காரணிகள் இந்த மாபெரும் வெற்றிக்கு உதவியுள்ளது.

ஒவ்வொரு காரணிகளும் எந்த விதத்தில், இந்த சாதனையை நிகழ்த்த உதவியுள்ளது என்று பார்ப்போம்.

குறைந்த முதலீடு;

குறைந்த முதலீடு;

மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குவது மிக சுலபமான விஷயமாகும்.

அதிகபடியாக, 4 லட்சங்கள் அல்லது அதற்கும் குறைவான விலையில் மாருதி ஆல்டோ கார்கள் கிடைக்கின்றது.

இதனால், நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களும், இந்த மாடல் காரை எளிதாக முதலீடு செய்து வாங்க முடிகிறது.

குறைந்த விலையிலான உபகரணங்கள்;

குறைந்த விலையிலான உபகரணங்கள்;

மாருதி நிறுவன தயாரிப்புகள் இந்தியாவிலேயே தயாரிக்கபடுகிறது.

அதே போல், இந்த வாகனங்கள் ஏதேனும் பழுது அடைந்தாலும், இங்கேயே தயாரிக்கபடுவதால், அதற்கான உதிரி பாகங்கள் மிக குறைந்த விலையில் கிடைத்து விடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

குறைந்த பராமரிப்பு செலவுகள்;

குறைந்த பராமரிப்பு செலவுகள்;

மாருதி நிறுவன தயாரிப்புகளின் நல்ல தரமானதாக இருக்கின்றது.

மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகளின் பராமரிப்பு செலவும் மிக குறைந்ததாக இருக்கின்றன. நமது கையில் இருக்கும் பணம் அதிகமாக செலவழித்து விடாமல், வாகனத்தின் பராமரிப்பு பணிகளை செய்து கொள்ள முடிகிறது.

ஏராளமான சர்வீஸ் செண்டர்கள்;

ஏராளமான சர்வீஸ் செண்டர்கள்;

மாருதி நிறுவனத்தின் மற்றொரு மிக முக்கிய பலமே அதன் சர்வீஸ் செண்டர்களின் நெட்வர்க் தான் என்று சொல்ல வேண்டும்.

மாருதி நிறுவனத்திற்கு, நாடு முழுவதும் ஏராளமான சர்வீஸ் செண்டர்கள் உள்ளன. இதனால், மாருதி வாகனங்கள், ஏதாவது பழுது அடைந்தாலும், அவற்றை சர்வீஸ் செய்து கொள்வது மிக எளிதாக உள்ளது.

மேலும், சர்வீஸ் செண்டர்களிலும், பணத்தை வாரி வாரி செலவழிக்க வேண்டிய நிலை இருப்பதில்லை. குறைந்த அல்லது நியாயமான செலவில், நமது வாகனங்களை சரி செய்து கொள்ளலாம்.

மக்களின் நம்பிக்கை;

மக்களின் நம்பிக்கை;

இவை எல்லாவற்றையும் தாண்டி, மாருதி நிறுவனம், மக்களிடம் நல்ல நன்மதிப்பை பெற்றுள்ளது.

மாருதி போல், எந்த ஒரு நிறுவனமும் தசாப்தங்களுக்கு தொடர்ந்து மக்களின் நம்பிக்கை வென்று, அதை அப்படியே தக்க வைப்பது சாதாரன விஷயம் அல்ல. அந்த விஷயத்தில் மாருதி நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

Most Read Articles
English summary
Alto Overtakes Maruti 800 To Become All-Time Best Selling Model In India. The Maruti Suzuki Alto has claimed the Indian record for the best selling car of all time, shipping more than 29 lakh units in 15 years of production. The Alto hit cumulative sales of 29,19,819 units in October, 2015.
Story first published: Thursday, November 12, 2015, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X