2017ல் அறிமுகமாகிறது புதிய ஆடி க்யூ6 எலக்ட்ரிக் எஸ்யூவி!

By Saravana

ஆடி நிறுவனம் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியை க்யூ6 என்ற பெயரில் ஆடி நிறுவனம் தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்எல்பி பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்படுகிறது. ஆடி க்யூ7 எஸ்யூவியின் அடிப்படையில்தான் இந்த புதிய மாடலும் தயாரிக்கப்பட உள்ளது. எனவே, இரு எஸ்யூவி மாடல்களும் உதிரிபாகங்களை பங்கிட்டுக் கொள்ளும்.

Audi Q6 SUV

இந்த எஸ்யூவியின் பேட்டரி 100 kWh திறன் கொண்டதாக இருக்கும். தற்போது கான்செப்ட் நிலையில் இந்த புதிய க்யூ6 எஸ்யூவி தயாரிப்பு இருக்கிறது. ஆனால், விரைவாக தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. வரும் 2017ம் ஆண்டு இறுதியில் இந்த புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாக ஆடி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆடி க்யூ6 எலக்ட்ரிக் எஸ்யூவி 5 டோர் மாடலாக இருக்கும். மற்ற ஆடி எஸ்யூவி மாடல்களைவிட இன்னும் ஸ்போர்ட்டியாக தோற்றத்துடன் வடிவமைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு நேர் போட்டியாக இந்த புதிய மாடல் இருக்கும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 12, 2015, 10:32 [IST]
English summary
Audi's new Q6 is being built on their MLB platform. The electric SUV will be based on the company's Q7 model, however, it will use an electric batter pack. This vehicle could have a battery pack as big as a 100kWh. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+