லேசர் ஹெட்லைட்டுடன் வரும் ஆடி ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார்!

ஆடி கார் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லமைக்கு சான்றாக விளங்கும் ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார் லேசர் ஹெட்லைட்டுடன் வர இருக்கிறது.

சாதாரண எல்இடி ஹெட்லைட்டை விட இந்த லேசர் ஹெட்லைட் இருமடங்கு அதிக தூரத்துக்கு ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் என்பதுடன், அதிக பிரகாசத்தையும் தர வல்லது.

ஆடி ஆர்8 கார் லேசர் ஹெட்லைட்

ஒவ்வொரு ஹெட்லைட்டிலும் ஒரு லேசர் மோடியூல் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த லேசர் மோடியூல், ஹெட்லைட்டில் இருக்கும் 4 லேசர் டயோடுகளை இயக்கி லேசர் ஒளிக்கற்றைகளை உற்பத்தி செய்யும்.

நீல வண்ணத்தில் உருவாகும் லேசர் ஒளிக்கற்றைகள், பாஸ்பரஸ் கன்வெர்ட்டர் மூலமாக வெண்மை நிற ஒளிக்கற்றைகளாக மாற்றப்பட்டு, சாலையில் ஒளிவெள்ளத்தை பாய்ச்சும். கார்களுக்கான ஹெட்லைட் தொழில்நுட்பத்தில் இந்த லேசர் ஹெட்லைட்டுகள் புதிய மைல்கல்லாக கூறப்படுகிறது.

புதிய ஆடி ஆர்8 காரில் இந்த லேசர் ஹெட்லைட் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக கொடுக்கப்பட உள்ளது. இந்த லேசர் ஹெட்லைட் தொழில்நுட்பத்தை ஆடி நிறுவனம் முதல்முறையாக ஆர்8 எல்எம்எக்ஸ் காரில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது நினைவுகூறத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, February 16, 2015, 18:02 [IST]
English summary
The Audi R8, the German carmakers flagship sports car will receive the all new laser headlight technology as one of its many new features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+