ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம் !

By Ravichandran

ஆடி நிறுவனத்தின் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்5 ஸ்போர்ட்பேக் காருக்கு போட்டியாக விளங்குவது போல், குறிப்பிடும் படியாக இந்தியாவில் எந்த காரும் இல்லை. இருப்பினும், சக நாட்டு ஜெர்மானிய நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் இருந்து எழும் போட்டியை சமாளிக்க, சில புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த ஆடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில், ஒன்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டிசைன்

டிசைன்

எஸ்5 ஸ்போர்ட்பேக்-கின் வடிவமைப்பு வழக்கமான ஆடி கார்களை போன்ற சிறப்பான முன் பக்க க்ரில் அமைப்பு உள்ளது.

பிற மாடல்களை காட்டிலும், காரின் முன் பகுதியில் அதிக அளவில் குரோம் பூச்சு பாகங்களின் நெடி தூக்கலாகவே இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார், ஆடியின் 3.0 லிட்டர் வி6 டிஎஃப்எஸ்ஐ டர்போசார்ஜ்டு டைரக்ட் இஞ்ஜெக்‌ஷன் நுட்பம் கொண்ட பெட்ரோல் இஞ்ஜினை கொண்டுள்ளது.

அதிகபட்சமாக, 328 பிஹெச்பி சக்தியையும், உச்சபட்சமாக 440 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இது நான்கு சக்கரங்களை இயக்கும் 7-ஸ்பீட் எஸ்-டிரானிக் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப அம்சங்கள்

தொழில்நுட்ப அம்சங்கள்

ஆடி நிறுவனம் இந்த எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில், எட்டு ஏர்பேக்குகள், பிரேக் அஸிஸ்ட் கொண்ட எலக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் கண்ட்ரோல், ஈபிடி-யூடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், டேண்டம் பிரேக் பூஸ்டர், முன் சக்கரங்களிலும் பின் சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் இண்டெர்வென்ஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

இந்த எஸ்5 ஸ்போர்ட்பேக்-கின் சஸ்பென்ஷன் அமைப்பும், திறனும் பயணிகளுக்கு நல்ல சொகுசான அனுபவததை தரும்.

விலை

விலை

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார், இந்தியாவில் 62,96,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 21, 2015, 12:29 [IST]
English summary
Audi S5 Sportback Launched In India at Price Tags Starting from Rs. 62.96 Lakh ex-showroom (Delhi). This four-door luxury coupe adds to their impressive lineup of products in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+