பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது... சில சுவாரஸ்யத் தகவல்கள்!
உலகின் அதிவேக எஸ்யூவி மாடலான பென்ட்லீ பென்டைகாவின் உற்பத்தி துவங்கியது. இங்கிலாந்தின், க்ரூவ் பகுதியிலுள்ள பென்ட்லீ ஆலையின் உற்பத்தி பிரிவிலிருந்து முதலாவது பென்டைகா எஸ்யூவி வெளிவந்துள்ளது.
அனைத்து வித்திலும், எஸ்யூவி மார்க்கெட்டில் இந்த சொகுசு எஸ்யூவி ஒரு முன்மாதிரி மாடலாக இருக்கும் என்று பென்ட்லீ நிறுவனத்தின் தலைவர் வோல்ஃப்கேங் டர்ஹெய்மெர் கூறியிருக்கிறார். இந்த புதிய பென்ட்லீ எஸ்யூவி பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முதலீடு
இந்த புதிய சொகுசு எஸ்யூவி 840 மில்லியன் பவுண்ட் முதலீட்டில் பென்ட்லீ நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. மேலும், பென்ட்லீ நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு
இந்த புதிய எஸ்யூவி தயாரிப்புக்காக பிரத்யேக உற்பத்தி பிரிவு துவங்கப்பட்டது. அதில், 1,500 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

உருவாக்கம்
பென்ட்லீ நிறுவனத்தின் டிசைன் மற்றும் எஞ்சினியரிங் பிரிவு நிபுணர்கள் ஆகியோரின் 4 ஆண்டுகால அயராத முயற்சி மற்றும் உழைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

உற்பத்தி
இங்கிலாந்தின் க்ரூவ் பகுதியிலுள்ள பென்ட்லீ ஆலையின் உற்பத்தி பிரிவிலிருந்து முதல் எஸ்யூவி நேற்று வெளிவந்தது. வரும் ஜனவரி மாதம் முதல் டெலிவிரி துவங்குகிறது.

முதல் எஸ்யூவி
ஆந்த்ராசைட் என்ற பிரத்யேக கருமை வண்ணத்துடன் முதல் பென்டைகா எஸ்யூவி உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்தது.

உருவாக்க நேரம்
ஒவ்வொரு பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற அம்சங்களுடன், 130 மணி நேர மனித ஆற்றலில் உருவாக்கப்படுகிறது. இதற்காக, பிரத்யேக பெயிண்ட் ஷாப், உற்பத்தி பிரிவு, பாடி ஷாப் ஆகியவை இருக்கின்றன.

முதல் வாடிக்கையாளர்
இந்த எஸ்யூவியின் முதல் கஸ்டமர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

அதிவேக எஸ்யூவி
எஸ்யூவி வகையறாக்களில் உலகின் அதிவேக மாடல் இதுதான். 0 -100 கிமீ வேகத்தை 4.1 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு அதிகபட்சமாக 301 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

எஞ்சின்
இந்த புதிய எஸ்யூவியில் 600 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல 6.0 லிட்டர் டபிள்யூ-12 பெட்ரோல் எஞ்சின் இருக்கிறது.

மைலேஜ்
100 கிலோமீட்டர் செல்வதற்கு 13.1 லிட்டர் பெட்ரோல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடைமுறையில் நிச்சயமாக இதனை விட குறைவான மைலேஜ் தரும் என்று கூறலாம்.

விலை
2.97 லட்சம் அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் ரூ.1.95 கோடி விலையில விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








