ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் 5 சிறந்த ஹேட்ச்பேக் கார்கள்!

By Saravana

அடக்கமான வடிவம், அதிக எரிபொருள் சிக்கனம், பராமரிப்பு செலவு குறைவு என்பதுடன் நகர்ப்புறத்திலும், போக்குவரத்து மிகுந்த பகுதிகளுக்கும் ஹேட்ச்பேக் கார்கள்தான் சிறந்தவையாக இருக்கின்றன.

ஹேட்ச்பேக் கார்களுக்கு இருக்கும் அதிக வரவேற்பு மற்றும் விற்பனை எண்ணிக்கையை கருதி, இந்த செக்மென்ட்டில் ஏராளமான மாடல்கள் குவிந்துள்ளன. இந்த நிலையில், ரூ.5 லட்சத்தில் பட்ஜெட்டில் கிடைக்கும் 5 சிறந்த ஹேட்ச்பேக் மாடல்கள் பற்றிய விபரங்கள் இதோ உங்களுக்காக...

05. மாருதி வேகன் ஆர்

05. மாருதி வேகன் ஆர்

விலை: ரூ. 3.86 லட்சம்

மைலேஜ்: 20.51 கிமீ/லி

மாருதியின் விற்பனையில் அதிகம் பங்களிப்பை தரும் பட்ஜெட் கார் மாடல். சிறப்பான மைலேஜ், அதிக ஹெட்ரூம் போன்றவை இந்த காரின் ப்ளஸ் பாயிண்ட்டுகள். ஏசி, பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் போன்ற வசதிகளும் இருக்கின்றன. மாருதியின் விற்பனைக்கு பிந்தைய சிறப்பாக இருப்பதால், இந்த காரின் விற்பனையும் தொய்வு இல்லாமல் செல்கிறது.

வேகன் ஆர் எஞ்சின்

வேகன் ஆர் எஞ்சின்

இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.0 லிட்டர் கே-சீரிஸ் எஞ்சின் உள்ளது. அடக்கமான வடிவம், சிறப்பான ஹெட்ரூம் இதன் முக்கிய சிறப்பம்சங்கள்.

04. ஹூண்டாய் ஐ10

04. ஹூண்டாய் ஐ10

விலை: ரூ.4.02 லட்சம்

மைலேஜ்: 19.81 கிமீ/லி

சிறந்த டிசைன், இடவசதி, தரமிக்க பாகங்களுடன் கிடைக்கும் பட்ஜெட் கார். ஏசி, பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங், சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்கிறது.

ஐ10 எஞ்சின்

ஐ10 எஞ்சின்

ஹூண்டாய் ஐ10 காரில் 1.1 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும் 99 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. மறுவிற்பனை மதிப்பிலும் முன்னிலை பெறுகிறது.

03. ஹோண்டா பிரியோ

03. ஹோண்டா பிரியோ

விலை: ரூ.4.33 லட்சம்

மைலேஜ்: 18.9 கிமீ/லி

நம்பகமான ஹோண்டா எஞ்சின், இடவசதியில் தன்னிறைவான கார். ஆனால், இதன் பின்புற டிசைன்தான் இந்த காரின் ஒட்டுமொத்த மதிப்பையும் கெடுக்கும் விஷயம். ஏசி, பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகள் இந்த காரிலும் கிடைக்கிறது.

பிரியோ எஞ்சின்

பிரியோ எஞ்சின்

பிரியோ காரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 87 பிஎச்பி பவரையும், 109 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

02. நிசான் மைக்ரா ஆக்டிவ்

02. நிசான் மைக்ரா ஆக்டிவ்

விலை: ரூ.4.46 லட்சம்

மைலேஜ்: 19.4 கிமீ

ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் சிறப்பான கார் மாடல்களில் ஒன்று நிசான் மைக்ரா ஆக்டிவ். ஏசி, பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் வசதிகளுடன் கூடுதலாக ஏபிஎஸ் மற்றும் ஓட்டுனர் பக்கத்திற்கான உயிர் காக்கும் காற்றுப்பையுடன் கிடைக்கிறது.

மைக்ரா ஆக்டிவ் எஞ்சின்

மைக்ரா ஆக்டிவ் எஞ்சின்

மைக்ரா ஆக்டிவ் காரில் இருக்கும் 3 சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

 01. மாருதி செலிரியோ

01. மாருதி செலிரியோ

விலை: ரூ4.54 லட்சம்

மைலேஜ்: 23.1 கிமீ/லி

புதிய டிசைனில் வெளிவந்திருக்கும் மாருதியின் பட்ஜெட் கார் என்பது பலம். ஏசி, பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், சைல்டு சேஃப்டி லாக் போன்றவை உண்டு. மாருதியின் சிறந்த சர்வீஸ் கட்டமைப்பு வசதி, பராமரிப்பு செலவு குறைவு போன்றவை இந்த காரின் கூடுதல் வலுசேர்க்கும் விஷயங்கள்.

செலிரியோ எஞ்சின்

செலிரியோ எஞ்சின்

இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும் 998சிசி 3 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த காரின் முக்கிய சிறப்பம்சம் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, 5 ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. இது நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கும், பெண்களுக்கும் சிறந்த மாடலாக இருக்கிறது.

பட்டியல்

பட்டியல்

ஃபோர்டு ஃபிகோ, செவர்லே பீட் கார்களின் புதிய மாடல் விரைவில் வர இருப்பதால், இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, April 2, 2015, 15:47 [IST]
English summary

 Here are 5 hatchbacks that give you good value for those precious 5 lakh rupees spent:
மேலும்... #ரிவியூ #review
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+