தீபாவளிக்காக கார் நிறுவனங்களால் வழங்கபடும் ஆஃபர்களின் விவரங்கள் !

By Ravichandran

தீபாவளியை ஒட்டி கார் நிறுவனங்கள் வெவ்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகின்றன.

தொடர் பண்டிகை காலங்களை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள், பல வகையான ஆஃபர்களையும், பரிசுகளையும் வழங்குகின்றன.

செக்மண்ட் ரீதியாக, எந்த நிறுவனங்கள், எப்படிபட்ட ஆஃபர்களை வழங்குகின்றன என ஒரு அலசல் இதோ உங்கள் பார்வைக்கு வழங்கபடுகிறது.

ஹேட்ச்பேக் - ஃபியட் புண்டோ

ஹேட்ச்பேக் - ஃபியட் புண்டோ

ஹேட்ச்பேக் கார்கள் வகையில், ஃபியட் புண்டோ, ரூபாய் 70,000 வரையிலான சலுகைகளுடன் கிடைக்கின்றது.

ஃபியட் புண்டோ மீதான ஆஃபர்களின் விவரங்கள்;

(*) சேமிப்பு --- 30,000 ரூபாய்

(*) எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் --- 25,000 ரூபாய்

(*) கார்பரேட் டிஸ்கவுண்ட் (தள்ளுபடி) --- 5,000 ரூபாய்

(*) லாயல்டி ஸ்கீம் --- 10,000 ரூபாய் தள்ளுபடி (இது ஏற்கனவே ஃபியட் நிறுவன கார் கொண்டுள்ளவர்களுக்கு வழங்கபடுகிறது).

ஹேட்ச்பேக் - ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹேட்ச்பேக் - ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மாடல் காரின் மீது, ஹூண்டாய் நிறுவனம் ரூபாய் 70,000 வரையிலான ரூபாய் வரையிலான ஆஃபர்களை வழங்குகின்றது.

கிராண்ட் ஐ10 மீதான ஆஃபர்களின் விவரங்கள்;

(*) எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் --- 40,000 ரூபாய்

(*) இலவச இன்ஷுரன்ஸ் --- 22,000 ரூபாய்

(*) கேஷ் டிஸ்கவுண்ட் --- 8,000 ரூபாய் என்ற வகையிலும் ஆஃபர்கள் கிடைக்கின்றது.

தென் கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் வழங்கும் இந்த ஆஃபர்கள் அனைத்து வேரியண்ட்கள் மீதும் கிடைக்கின்றது.

ஹேட்ச்பேக் - செவர்லே பீட்

ஹேட்ச்பேக் - செவர்லே பீட்

செவர்லே நிறுவனம் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் மீதும், 60,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகளையும், சேமிப்புகளையும் வழங்குகின்றது.

செவர்லே பீட் மீதான ஆஃபர்களின் விவரங்கள்;

(*) கேஷ் டிஸ்கவுண்ட் (தள்ளுபடி) --- 40,000 ரூபாய்

(*) எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் --- 20,000 ரூபாய் என்ற முறையிலும் ஆஃபர்கள் கிடைக்கின்றது.

ஹேட்ச்பேக் - டாடா நானோ

ஹேட்ச்பேக் - டாடா நானோ

டாடா நானோ மீதும் பல வகை ஆஃபர்கள் கிடைக்கின்றது. டாடா மோட்டர்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு 2,000 ரூபாய் கார்பரேட் டிஸ்கவுண்டாக

(தள்ளுபடி) வழங்கபடுகிறது. இல்லையெனில், வேறு சில ஆஃபர்கள் உள்ளன.

டாடா நானோ மீது, பொதுமக்களுக்கான ஆஃபர்களின் விவரங்கள்;

(*) கேஷ் பெனிஃபிட் --- 15,000 ரூபாய் வரை

(*) எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் --- 20,000 ரூபாய்

மொத்தமாக கூட்டுகையில் பொதுமக்களுக்கு 35,000 ரூபாய் வரையிலான ஆஃபர்கள் கிடைக்கின்றது.

டாடா மோட்டர்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கிடைக்கும் 2,000 ரூபாய் கூடுதல் ஆஃபராக சேர்க்கையில், 37,000 ரூபாய் வரையிலான ஆஃபர்கள் கிடைக்கின்றது.

நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி வெர்ஷன் காரின் மீது எந்தவித ஆஃபர்களும் வழங்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

எஸ்யூவி - ரெனோ டஸ்டர்

எஸ்யூவி - ரெனோ டஸ்டர்

ரெனோ நிறுவனம், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் மாடல்களை பொறுத்து, 1.2 லட்சம் ரூபாய் வரையிலான ஆஃபர்களை வழங்குகிறது.

எஸ்யூவி - டாடா ஸஃபாரி ஸ்டார்ம்

எஸ்யூவி - டாடா ஸஃபாரி ஸ்டார்ம்

தீபாவளியை ஒட்டி, டாடா மோட்டர்ஸ் நிறுவனம், டாடா ஸஃபாரி ஸ்டார்ம் மாடல் மீது 37,000 ரூபாய் வரையிலான ஆஃபர்களை வழங்குகின்றது.

இந்த 37,000 ரூபாய் ஆஃபர்கள், எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் மற்றும் கார்பரேட் டிஸ்கவுண்ட் (தள்ளுபடி) என்ற வகையிலும் கிடைக்கின்றது.

எஸ்யூவி - ஃபியட் அவென்ச்சுரா;

எஸ்யூவி - ஃபியட் அவென்ச்சுரா;

ஃபியட் நிறுவனம், ஃபியட் அவென்ச்சுரா மீது 80,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகளை வழங்குகின்றது.

புண்டோ இவோ-க்கு வழங்கபட்டுள்ள ஆஃபர்களை போன்றே, ஃபியட் அவென்ச்சுரா மீதும் 80,000 ரூபாய் மதிப்புள்ள கார்பரேட் டிஸ்கவுண்ட்கள், எக்ஸ்சேஞ்ஜ் போனஸ், கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் லாயல்டி போனஸ் உள்ளிட்ட வகைகளில் ஆஃபர்கள் கிடைக்க உள்ளது.

எஸ்யூவி - மாருதி சுசுகி எஸ்-கிராஸ்

எஸ்யூவி - மாருதி சுசுகி எஸ்-கிராஸ்

மாருதி சுசுகியால் சமீபத்தில் அறிமுகம் செய்யபட்ட மாருதி சுசுகி எஸ்-கிராஸ், 90,000 ரூபாய் வரையிலான ஆஃபர்களுடன், நெக்ஸா விற்பனை மையங்களில் கிடைக்கின்றது.

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் மாடல்களை பொருத்து, மாருதி சுசுகி எஸ்-கிராஸ் மீது,

(*) 40,000 ரூபாய் வரையிலான சலுகை, எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் என்ற முறையிலும்,

(*) 50,000 ரூபாய் வரையிலான சலுகை, கேஷ் டிஸ்கவுண்டாகவும் வழங்கபடுகிறது.

செடான் - டாடா ஸெஸ்ட்

செடான் - டாடா ஸெஸ்ட்

டாடா நிறுவனம், டாடா ஸெஸ்ட் மீது 47,000 ரூபாய வரையிலான ஆஃபர்களை தருகின்றது.

எக்ஸ்சேஞ்ஜ் போனஸ், கேஷ் பெனிஃபிட் உள்ளிட்ட வகைகளின் அடிப்படையில் இந்த ஆஃபர்கள் வழங்குபடுகிறது.

முன்பு கூறியது போல், டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின், சில குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு 2,000 ரூபாய் கூடுதல் சலுகையாக கிடைக்கிறது.

செடான் - ஃபியட் லீனியா

செடான் - ஃபியட் லீனியா

ஃபியட் கார் நிறுவனம், ஃபியட் லீனியா மீது 1,10,000 ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்குகின்றது.

ஃபியட் லீனியா கார் மீது கிடைக்கும் ஆஃபர்களின் விவரங்கள்;

(*) கேஷ் பெனிஃபிட் --- 60,000 ரூபாய்

(*) எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் --- 15,000 ரூபாய்

(*) கார்பரேட் டிஸ்கவுண்ட் --- 5,000 ரூபாய்

ஃபியட் லீனியா கிளாசிக் மீது எந்த விதமான ஆஃபர்களும் வழங்கப்படவில்லை என அறிவிக்கபட்டுள்ளது.

செடான் - ஹூண்டாய் வெர்னா

செடான் - ஹூண்டாய் வெர்னா

எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ளும் வகையில் கார்கள் இருந்தால், 50,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் வழங்கபடுகிறது.

கூடுதலாக, 20,000 ரூபாய் கேஷ் டிஸ்கவுண்ட்டாக வழங்கபடுகிறது.

இது இரண்டையும் சேர்த்து, ஹூண்டாய் வெர்னா மீது மொத்தமாக, 70,000 ரூபாய் வரையிலான ஆஃபர்கள் கிடைகின்றது.

லக்‌சுரி செடான் (சொகுசு செடான்) - மெர்சிடிஸ்-பென்ஸ் ஈ-கிளாஸ்

லக்‌சுரி செடான் (சொகுசு செடான்) - மெர்சிடிஸ்-பென்ஸ் ஈ-கிளாஸ்

மெர்சிடிஸ்-பென்ஸ் ஈ-கிளாஸ் கார்களில் எந்த வகை வேரியண்ட்களை தேர்வு செய்தாலும், 6 லட்சம் ரூபாய் ஃபிளாட் டிஸ்கவுண்ட்-டாக (தள்ளுபடி) கிடைக்கின்றது.

லக்‌சுரி செடான் (சொகுசு செடான்) - மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்

லக்‌சுரி செடான் (சொகுசு செடான்) - மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்

மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் காரின் ரீடெய்ல் விலையில், 2,00,000 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும்.

லக்‌சுரி செடான் (சொகுசு செடான்) - பிஎம்டபுள்யூ 3 சீரீஸ்

லக்‌சுரி செடான் (சொகுசு செடான்) - பிஎம்டபுள்யூ 3 சீரீஸ்

பிஎம்டபுள்யூ 3 சீரீஸ் கார்கள் மீது 8,00,000 ரூபாய் வரையிலான கேஷ் டிஸ்கவுண்ட் கிடைக்க உள்ளது.

லக்‌சுரி செடான் (சொகுசு செடான்) - பிஎம்டபுள்யூ 5 சீரீஸ்

லக்‌சுரி செடான் (சொகுசு செடான்) - பிஎம்டபுள்யூ 5 சீரீஸ்

பிஎம்டபுள்யூ 5 சீரீஸ் மாடல்களின் 5,00,000 ரூபாய் வரையிலான ஆஃபர்கள் கிடைக்கின்றது.

அனைத்து வேரியண்ட்களின் மீதும் கிடைக்கும் இந்த ஆஃபர்களானது ஸ்டாக் உள்ளவரை மட்டுமே என அறிவிக்கபட்டுள்ளது. அதனால், விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் முந்தும் படி கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

லக்‌சுரி செடான் (சொகுசு செடான்) - ஆடி ஏ4

லக்‌சுரி செடான் (சொகுசு செடான்) - ஆடி ஏ4

ஆடி ஏ4 மீது 7 லட்சம் ரூபாய் கேஷ் டிஸ்கவுண்ட்-டாக வழங்கபடுகிறது.

இந்த 7 லட்சம் ரூபாய் தள்ளுபடி, அனைத்து வேரியண்ட்களின் மீதும் ஸ்டாக் உள்ளவரை வழங்கப்படுகிறது.

ஏராளமான ஆஃபர்கள்

ஏராளமான ஆஃபர்கள்

இப்படியாக, பண்டிகை காலங்களை கொண்டாட வழங்கப்படும் பல்வேறு ஆஃபர்களை, வாடிக்கையாளர்கள் உபயோகித்து பயன் பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 6, 2015, 10:46 [IST]
English summary
Diwali celebrations are already on. This is the best time for carmakers to sell more vehicles (to make up for lost sales?). Let's know in detail about the Best Car Discounts For Diwali 2015, and other offers given by various Carmakers for this festive season.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+