ஒலியைவிட அதிவேகத்தில் பயணிக்கும் சூப்பர்சோனிக் கார்: லண்டனில் அறிமுகம்!

Written By:

ஒலியை விட அதிவேகத்தில் பயணிக்கும் வல்லமை கொண்ட உலகின் அதிவேக ப்ளட் ஹவுண்ட் சூப்பர்சோனிக் கார் லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது.

கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் இந்த கார் பயணிக்கும் திறன் கொண்ட, இந்த புதிய சூப்பர்சோனிக் கார் குறித்த பல சிறப்பு செய்தித் தொகுப்புகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்திருப்பீர்கள். தற்போது வெளியாகியிருக்கும் கூடுதல் தகவல்கள் மற்றும் சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 முதல் சாதனை

முதல் சாதனை

கடந்த 1983ம் ஆண்டு ஜான் அக்ராய்டு வடிவமைத்த த்ரஸ்ட்-2 காரில் முதல் அதிவேக சாதனை படைக்கப்பட்டது. அந்த காரை ரிச்சர்ட் நோபுள் மணிக்கு 1,047.49 கிமீ வேகத்தில் செலுத்தி, உலகின் அதிவேக காருக்குரிய பெருமையை பெற்று தந்தார்.

இரண்டாவது சாதனை

இரண்டாவது சாதனை

இரண்டாவது சாதனை 1997ல் நிகழ்த்தப்பட்டது. த்ரஷ்ட்-2 காரை ஓட்டிய ரிச்சர்ட் நோபுள் தலைமையிலான குழுவினர் எஸ்எஸ்சி என்ற பெயரிலான சூப்பர்சோனிக் காரை உருவாக்கினர். அந்த காரையும் ரிச்சர்ட் நோபுள்தான் ஓட்டினார். மணிக்கு 1,228 கிமீ வேகத்தை தொட்டு இரண்டாவது உலக சாதனை படைக்கப்பட்டது.

மூன்றாவது சாதனை இலக்கு

மூன்றாவது சாதனை இலக்கு

மூன்றாவது சாதனைக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கார்தான் ப்ளட் ஹவுண்ட் எஸ்எஸ்சி. இந்த காரையும் ரிச்சர்ட் நோபுள் தலைமையிலான 70 பேர் கொண்ட குழுவினர்தான் உருவாக்கி வருகின்றனர். மணிக்கு 1,000 மைல் என்ற வேகத்தை தொட்டு விடும் இலக்குடன் இந்த காரை உருவாக்கியுள்ளனர். அதாவது, மணிக்கு 1,609 கிமீ வேகத்தை தொட்டுவிட வேண்டும்.

சோதனை

சோதனை

அடுத்த ஆண்டு பிளட்ஹவுண்ட் காரை மணிக்கு 800 மைல் (1,288கிமீ) வேகத்தில் இயக்கி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 2017ம் ஆண்டில் மணிக்கு 1600 கிமீ வேகத்தை தொட்டு இலக்கை நிறைவு செய்ய திட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சோதனை களம்

சோதனை களம்

தென் ஆப்ரிக்காவில் உள்ள ஹக்ஸ்கீன் பகுதியில் வைத்து இந்த காரை சோதனை செய்து சாதனை படைக்க உள்ளனர். இந்த சோதனை தளம் 19 கிமீ நீளமும், 3.2 கிமீ அகலமும் கொண்டது.

ஆற்றல் உற்பத்தி திறன்

ஆற்றல் உற்பத்தி திறன்

இந்த காரில் யூரோ ஃபைட்டர் தைபூன் போர் விமானத்தில் இருக்கும் ரோல்ஸ்ராய்ஸ் இஜே-200 ஜெட் எஞ்சின், ஜாகுவார் நிறுவனத்திந் வி8 கார் எஞ்சின் என பல்வேறு ஆற்றல் உற்பத்தி மையங்களிலிருந்து கிடைக்கும் ஆற்றலை ராக்கெட் ஆக்சிடைசர் பம்ப் வழியாக ஒருமுகப்படுத்தி, உந்துசக்தியை பெறும். போர் விமானங்களில் இருப்பது போன்று ஆக்சிஜன் மாஸ்க்குடன் கூடிய காக்பிட் அமைப்பு பெற்றிருக்கிறது.

அதிகபட்ச சக்தி

அதிகபட்ச சக்தி

இந்த சூப்பர்சோனிக் கார் 1,35,000 குதிரைசக்தி திரன் கொண்டது. அதாவது, 180 ஃபார்முலா ஒன் பந்தய கார்களின் அதிகபட்ச எஞ்சின் சக்திக்கு ஒப்பான ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

சவால்கள்

சவால்கள்

இந்த சூப்பர்சோனிக் கார் 7.5 டன் எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் உருவாக்கப்பத்தில், பல்வேறு சவால்களை வடிவமைப்பு பொறியாளர்கள் சந்தித்து வருகின்றனர். விண்வெளி, விமானவியல் மற்றும் ஃபார்முலா- 1 கார்களின் டிசைன்களின் அடிப்படைகளை இந்த காரின் வடிவமைப்பில் பயன்படுத்தி வருகின்றனர்.

 வலிமையான சக்கரங்கள்

வலிமையான சக்கரங்கள்

சக்கரங்கள் ஒலியின் வேகத்தை தாண்டும் வல்லமை கொண்ட இந்த காரில் டயர்கள் கொண்ட சக்கரங்களை பயன்படுத்த இயலாது என்பதால், 90 கிலோ எடை கெண்ட அலுமினிய டிஸ்க்குகள் பயன்டுத்தப்பட உள்ளன.

ஏர் பிரேக்

ஏர் பிரேக்

சாதாரண வகை பிரேக் அமைப்புகள் மணிக்கு 320 கிமீ வேகம் வரையிலும் வாகனத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. எனவே, இந்த ராக்கெட் காரில் விஷேச ஏர் பிரேக் சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது.

விசேஷ எரிபொருள்

விசேஷ எரிபொருள்

எரிபொருள் இந்த ராக்கெட் காரில் இருக்கும் கேப்சூல் வடிவிலான ஸ்டீல் டேங்கில் ஹை டெஸ்ட் பெராக்ஸைடு(HTP) எரிபொருள் நிரப்பப்பபட்டிருக்கும். வெறும் 20 வினாடிகளில் 980 லிட்டர் எரிபொருளை ராக்கெட் உறிஞ்சித் தள்ளும்.

ரத்தம் உறையும்...

ரத்தம் உறையும்...

இந்த காரை 19 கிமீ நீளமுள்ள பகுதியில் வைத்து சோதனை நடத்த உள்ளனர். 0- 1609 கிமீ வேகத்தை வெறும் 42 வினாடிகளில் எட்டிவிட வேண்டும் என்பது இலக்கு. இதுபோன்ற வேகத்தில் காரை செலுத்தும்போது ஓட்டுபவருக்கு பல உடலில் சிக்கல்கள் ஏற்படும். எனவே, தற்போது ஓட்டுபவருக்கு விமானங்களிலும், சிமுலேட்டரிலும் வைத்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. காரை அதிவேகத்திற்கு கொண்டு செல்லும்போதும், நிறுத்தும்போதும் ரத்தமே உறைந்துபோகும் அளவுக்கு ஓட்டுபவர் உடலில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

ஓட்டப்போவது யார்?

ஓட்டப்போவது யார்?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த அதிவேக சாதனைக்கான புதிய ராக்கெட் காரை ஓட்டப்போவது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். ஆன்டி க்ரீன் அல்லது ரிச்சர்ட் நோபுள் ஆகிய இருவரில் ஒருவராக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரிச்சர்ட் நோபுள் இங்கிலாந்து போர் விமான பைலட்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

 
English summary
Bloodhound Supersonic Car Makes Global Debut In London.
Story first published: Monday, September 28, 2015, 10:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark