மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் அறிமுகம் - முழு விபரம்
மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.. முந்தைய மாடலில் விற்பனையில் சொதப்பிய வேரியண்ட்டுகளை கழற்றி விட்டு விட்டு, தற்போது 118டீ ஸ்போர்ட்லைன் என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யபபட்டுள்ளது.
ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் ஓட்டுதல் தரத்தில் சிறப்பான மாடலாக இருந்தாலும், பென்ஸ் ஏ கிளாஸ் காரின் டிசைனுடன் இந்த காரால் போட்டி போட முடியவில்லை. எனவே, தோற்றத்தில் கூடுதல் ஐயிட்டங்களை சேர்த்து புதுப்பொலிவு கொண்ட மாடலாக பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்துள்ளது.

வடிவத்தில் மாற்றம்
முந்தைய மாடலைவிட உயரத்திலும், நீளத்திலும் அதிகரித்துள்ளது. தற்போது 4,329மிமீ நீளம், 1,765மிமீ அகலம் மற்றும் 1,440மிமீ உயரம் கொண்டதாக இருக்கிறது.

டிசைன் மாற்றங்கள்
முன்பக்கத்தில் முக்கிய மாற்றம் பெரிய அளவில் சிறுநீரக வடிவ க்ரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. பை - ஸினான் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், பின்புறத்தில் L வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை புகைப்போக்கி குழாய்கள் போன்ற புதிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த தோற்றத்தில் பெரிய அளவில் மாறுதல்கள் இல்லை.

இன்டிரியர்
புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, 6.5 இன்ச் திரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பியானோ பிளாக் என்ற பளபளப்பு மிக்க அடர் கருப்பு வண்ணத்திலான சென்டர் கன்சோல், ஏசி வென்ட்டுகளில் க்ரோம் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

எஞ்சின்
மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் 118டீ ஸ்போர்ட்லைன் மாடலில் 1995சிசி டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும்.

விலை விபரம்
ரூ.29.90 லட்சம் தானே நகரத்தின் எக்ஸ்ஷோரூம் விலையில் மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








