பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் ஐ8 ஸ்போர்ட்ஸ், ஜிஆர்டி வி8ஐ காராக மாற்றி வடிவமைப்பு

By Ravichandran

பிஎம்டபுள்யூ நிறுவனத்தின், ஐ8 ஸ்போர்ட்ஸ் காரை, ஜெர்மனியை சேர்ந்த கபூரா ரேசிங் டெக்னாலஜீஸ் நிறுவனம், ஒட்டுமொத்தமாக மாற்றி அமைத்துள்ளது.

பிரத்யேக தேவைகளுக்கு ஏற்ப, அவ்வபோது வாகனங்கள் அவை உருவாக்கபட்ட நோக்கத்தையும் மீறி, மாற்றி மறுவடிவமைக்கபடுவது வழக்கம். இந்த பிஎம்டபுள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார், எப்படி மாற்றபட்டுள்ளது என்ப்தை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பிஎம்டபுள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் காரின் பரிமாற்றம்;

பிஎம்டபுள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் காரின் பரிமாற்றம்;

பிஎம்டபுள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார், சுற்றுசூழலுக்கு எந்த பாதகமும் உருவாக்காமல், நன்மை செய்யும் வகையில் முதலில் வடிவமைக்கபட்டிருந்தது.

இதை, ஜெர்மனியை சேர்ந்த ட்யூனிங் நிறுவனமான கபூரா ரேசிங் டெக்னாலஜீஸ், ஐ8 ஸ்போர்ட்ஸ் காரை நேர் எதிராக ட்யூனிங் செய்து மாற்றி வடிவமைத்துள்ளது.

தற்போது ஜிஆர்டி வி8ஐ என அழைக்கபடும் இந்த மறுவடிவமைக்கபட்ட கார், 800 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இஞ்ஜின் வகைகள்;

இஞ்ஜின் வகைகள்;

பிஎம்டபுள்யூ ஐ8 ஹைப்ரிட் வாகனம், அதன் மறுவடிவமைக்கபடாத வடிவில், 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர், டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின்

கொண்டிருந்தது. மேலும், இது எம்5 மற்றும் எம்6 மாடல்களில் இருந்து தழுவபட்ட 4.4 லிட்டர், ட்வின்-டர்போ வி8 இஞ்ஜின் கொண்டிருந்தது.

இப்படிபட்ட வகையில், 559 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்ட இந்த பிஎம்டபுள்யூ ஐ8 காரை, 800 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் வகையில் மறுவடிவமைக்கபட்டுள்ளது. இதன் சற்று தீவிரதன்மை கொண்ட வடிவம் 700 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் வகையில் கிடைகின்றது.

எடை கூட்டல்;

எடை கூட்டல்;

இந்த ஜிஆர்டி வி8ஐ மாடலுக்கு எடை வெகுவாக கூட்டபட்டுள்ளது. இதன் எடையை கூட்டுவதற்காக, இண்டெக்ரேடட் டிஃப் கொண்ட ரேசிங் 6-ஸ்பீட் ஸீகுவென்ஷியல் ரேசிங் கியர்பாக்ஸ் இணைக்கபட்டுள்ளது.

ஜிஆர்டி வி8ஐ மாடலில், ‘ஹை பெர்ஃபார்மன்ஸ் சஸ்பென்ஷன் ஆர்கிடெக்சர்' எனப்படும் கட்டுமானத்தை அடிப்படையாக கொண்ட குறைந்த எடையுள்ள டைடேனியம் எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் இணைக்கபட்டுள்ளது.

திறன் விவரங்கள்;

திறன் விவரங்கள்;

ஜிஆர்டி வி8ஐ மாடலின் திறன் குறித்த விவரங்கள் முழுமையாக, இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை.

விலை;

விலை;

கபூரா ரேசிங் டெக்னாலஜீஸ் நிறுவனம் மூலம், மறுவடிவமைக்கபட்டு வெளியிடபட்டுள்ள இந்த ஜிஆர்டி வி8ஐ கார், 7,50,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 5.4 கோடி ரூபாய்) என்ற விலையில் விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது, பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் ஐ8 காரை காட்டிலும், 6 மடங்கு கூடுதலான விலை கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Article Published On: Wednesday, December 9, 2015, 12:22 [IST]
English summary
Gabura Racing Technologies from Germany has retuned the BMW i8 into an Environment Hating Monster. BMW's eco-friendly i8 sports car has been retuned into newer version called the GRT V8i, which is a 800bhp, V8 powered supercar now.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+