பிஎம்டபுள்யூ காரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி இங்கிலாந்தில் அறிமுகம் - இந்தியாவில் வருமா?

Written By:

பிஎம்டபுள்யூ காரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி இங்கிலாந்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

பிஎம்டபுள்யூ நிறுவனம், இங்கிலாந்து நாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் முறையில் பிஎம்டபுள்யூ கார்களை ஆர்டர் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

ஆன்லைன் முறை மூலம், பிஎம்டபுள்யூ கார்களை எப்படி ஆர்டர் செய்ய முடிகிறது என்பதை வரும் ஸ்லைடரிகளில் பார்க்கலாம்.

ஸ்டெப் 1 ;

ஸ்டெப் 1 ;

ஆன்லைனில் ஆர்டர் (புக்கிங்) செய்யும் போது, நீங்கள் பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் தளத்தில் நுழைந்த உடன், உங்களிடம் சில கேள்விகள் கேட்கபடுகிறது. உதாரணமாக,

(*) காரை எங்கே இயக்க விரும்புகிறீர்கள் ?

(*) வழக்கமாக எத்தனை பயணிகளுடன் காரை உபயோகிப்பீர்கள் ?

(*) உங்கள் பூட்-டில் என்ன பொறுந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

(*) நீங்கள் வாங்க நினைக்கும் காரில், எதை முக்கியமான அம்சமாக கருதுகிறீர்கள்?

இப்படியாக சில கேள்விகளை கேட்டபின், நாம் அளிக்கும் பதில்களை பொறுத்து, நாம் எந்த மாடல் காரை வாங்கலாம் என பிஎம்டபுள்யூ வலைதளத்தில் இருந்து சில தேர்வுகள் வழங்கப்படுகிறது.

ஸ்டெப் 2 ;

ஸ்டெப் 2 ;

கார் ஆர்வலர்கள், பிஎம்டபுள்யூ வலைதளத்தில் இருந்து வழங்கபட்டுள்ள தேர்வுகளில் இருந்து, தங்களுக்கு பிடித்த கார்கள் இருந்தால், அதனை தேர்வு செய்து அடுத்த கட்டத்திற்கு நகறலாம். அல்லது மீண்டும் முதலில் இருந்து துவங்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு உதவுதற்காக, பிஎம்டபுள்யூ திறன்மிக்க ஆலோசகர்களை நியமித்துள்ளது. இந்த ஆலோசகர்களை காலை 8 மணி முதல் மாலை 10 மணி வரை, வாரத்தின் 7 நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஸ்டெப் 3 ;

ஸ்டெப் 3 ;

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த ஸ்பெசிஃபிகேஷன்களில் (விவரக்குறிப்புகள்) காரை தேர்வு செய்து, மேலும் அது எப்போது டெலிவரி செய்யபடும் என்பதையும் முடிவு செய்து கொள்ள முடியும்.

மேலும், வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்வு செய்த ஸ்பெசிஃபிகேஷன்களுடனும், குறைந்த டெலிவரி காலஇடைவெளியுடனும் வேறு ஏதேனும் கார்கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து பார்த்து கொள்ள முடியும்.

ஸ்டெப் 4 ;

ஸ்டெப் 4 ;

வாங்க உள்ள காரை தேர்வு செய்தபின், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள டீலர்களையோ அல்லது தங்களுக்கு பிடித்த டீலர்ஷிப்களையோ தேர்வு செய்து கொள்ளலாம்.

அதன் பின், அந்த குறிப்பிட்ட டீலர்களிடம் கிடைக்கும் ஆஃபர்களை குறித்தும், விலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசித்து கொள்ளலாம்.

வாய்ப்புகள் கிடைத்தால், அந்த குறிப்பிட்ட டீலர்களிடம் ஏதேனும் நல்ல விலையில், சிறப்பான ஆஃபர்களுடன் காரை வாங்க முடிந்தாலும், அதற்கு உண்டான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.

ஸ்டெப் 5 ;

ஸ்டெப் 5 ;

வாடிக்கையாளர்கள் விருப்பட்டால், தங்களின் பழைய காரையும் எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ள முடியும்.

தங்களின் கார்களுக்கு என்ன எக்ஸ்சேஞ்ஜ் விலை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள, வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரையும், ஓடோமீட்டர் மூலம் காண்பிக்கப்படும், அந்த வாகனம் உபயோகிக்கபட்ட தூரத்தையும் குறிப்பிட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் வாகனம், எந்த அளவுக்கு மதிப்பு கொண்டுள்ளது அல்லது எந்த விலைக்கு மாற்ற தகுதியானது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஸ்டெப் 6 ;

ஸ்டெப் 6 ;

இதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய கார்களையும் விற்பனை செய்து கொள்ளலாம். மேலும், தங்களின் புதிய காருக்கான ஃபைனான்சிங்கையும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

ஃபைனான்சிங்-கிற்கான ஏற்பாடுகள் தேவையில்லை என்றால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியங்கள் இல்லை.

நேரடியாக, வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்வு செய்த காருக்கான டெபாசிட் தொகையினை கிரெடிட் கார்ட் அல்லது பேங்க் (வங்கி) டிரான்ஸ்ஃபர் முறையில் செலுத்தலாம்.

ஸ்டெப் 7;

ஸ்டெப் 7;

தேவைகளின் அடிப்படையில் ஃபைனான்சிங்-கிற்கான வாய்ப்புகளை தேடிய வாடிக்கையாளார்களும் (ஃபைனான்சிங் வாய்ப்புகள் கிடைத்த பின்),(ஃபைனான்சிங் வாய்ப்புகளுக்கான தேவை இல்லாமல்) நேரடியாக டெபாசிட் தொகையை தாங்களே ஏற்பாடு செய்து, இணையதளம் மூலம் செலுத்திய வாடிக்கையாளர்களும், தாங்கள் தேர்வு செய்த கார்களை தங்கள் இல்லதிற்கே கொண்டு வர செய்து (ஹோம் டெலிவரி) பெற்று கொள்ளலாம்.

டெலிவரி தேதி குறித்த தெளிவுதன்மை;

டெலிவரி தேதி குறித்த தெளிவுதன்மை;

பிஎம்டபுள்யூ கார் நிறுவனத்தின் கருத்து படி, ஒரு வாடிக்கையாளர் தனக்கு பிடித்த காரை 10 நிமிடத்திற்குள் தேர்வு செய்து, அதற்கான ஃபைனான்சிங் ஏற்பாடுகளுக்கான தேவை இருந்தால், அதையும் பெற்று கொண்டு, காரை ஆன்லைன் மூலம் புக்கிங்கும் (ஆர்டர்) செய்து கொள்ளலாம்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்ன என்றால், வாடிக்கையாளர்கள் தாங்கள் புக்கிங் செய்யும் கார், தங்களுக்கு எப்போது டெலிவரி செய்யபடும் என்பதையும், அந்த 10 நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும்.

விருப்பத்தை பொறுத்து, கார் எப்போது ஹோம் டெலிவரி செய்யபடலாம் என்பதையும் வாடிக்கையாளர்களே நிர்ணயித்து கொள்ளும் வாய்ப்பும் பிஎம்டபுள்யூ மூலம் வழங்கபடுகிறது.

இந்தியாவிற்கு வருமா இத்திட்டம்?

இந்தியாவிற்கு வருமா இத்திட்டம்?

ஆன்லைன் மூலம் பிஎம்டபுள்யூ கார் புக்கிங் செய்யபடும் இந்த நடைமுறை, தற்போது வரை இங்கிலாந்தில் மட்டுமே அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இத்திட்டம், உலகின் மற்ற நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவிலும் நடைமுறைபடுத்தபடுமா என்பதை குறித்து எந்த ஒரு தகவலும், பிஎம்டபுள்யூ நிறுவனம் சார்பாக தெரிவிக்கபடவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபுள்யூ கார்களை ஆன்லைனில் புக்கிங் செய்வது போன்ற திட்டம், தொடர்பான செய்திகளை கான...

இனி ஸ்னாப்டீல் தளம் மூலமும் சுஸுகி இருசக்கர வாகனங்களை வாங்கலாம்

வாகன விற்பனைக்கு பிரத்யேக இணையதளத்தை திறந்த ஸ்னாப்டீல்

English summary
BMW has Introduced Online Car Ordering System In UK (United Kingdom). According to this new system, a BMW customer can find a car suitable to his usage, arrange finance for and order the car. The Customer can also set a delivery date in just 10 minutes.
Story first published: Tuesday, December 1, 2015, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark