அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ ஐ8!
அடுத்த மாதம் இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபிள்யூ ஐ8 கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சரியாக ஓர் ஆண்டு கழித்து முறைப்படி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது பிஎம்டபிள்யூ.

இந்த ஹைபிரிட் காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 362 பிஎஸ் பவரை வழங்க வல்லவவை. 1,490 கிலோ எடை கொண்ட இந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் 0 -100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும்.
மணிக்கு அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டதாக குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளதால், ரூ.2 கோடி மதிப்பில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








