ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வரும் பிஎம்டபிள்யூ எம்5 கார்!

Posted By:

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக பிஎமட்பிள்யூ எம்5 கார் அறிமுகம் செய்யப்படும் என பிஎம்டபிள்யூவின் எம் ரக பெர்ஃபார்மென்ஸ் கார்களை தயாரிக்கும் பிரிவுக்கான புதிய தலைவர் பிரான்சிகஸ் வான் மீல் கூறியிருக்கிறார்.

பிஎம்டபிள்யூ எம்5 கார் மாடல் மட்டுமின்றி, எம் வரிசையில் அறிமுகம் செய்யப்பட உள்ள எதிர்கால பெர்ஃபார்மென்ஸ் கார் மாடல்களில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் சூசகமாக கூறியிருக்கிறார்.

BMW Car
 

புதிய எம்5 கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வர இருக்கிறது. மேலும், அதிகபட்ச டார்க்கையும், விரைவான சக்தியை வெளிப்படுத்தும், இந்த புதிய ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் துணை புரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த தலைமுறை எம்5 மற்றும் எம்6 கார்கள் முதலாவதாக இந்த புதிய ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வர இருக்கிறது. வரும் 2018ம் ஆண்டு இந்த புதிய தலைமுறை எம்5 கார் மாடலும், அதைத்தொடர்ந்து எம்6 மாடலும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/5LVk3NYTd7c" frameborder="0" allowfullscreen></iframe></center> 

English summary
Former boss of Audi RS and new head of BMW M, Franciscus van Meel, spoke to AutoExpress UK at the Detroit Auto Show, and hinted that the upcoming M5 and future BMW M models will adopt an all-wheel drive system.&#13;

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark