ரூ.1.15 கோடியில் விற்பனைக்கு வந்தது புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 எஸ்யூவி

By Saravana

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவி மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய காரை பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத் தலைவர் பிலிப் வான் சர் அறிமுகப்படுத்தினார்.

இரண்டாம் தலைமுறை மாடலாக வந்திருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடலை பிஎம்டபிள்யூ நிறுவனம் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெகிக்கிள் என்ற ரகத்தில் குறிப்பிடுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த 2008ம் ஆண்டு இந்த ஸ்போர்ட்ஸ் ஆக்ட்விட்டி என்ற கூபே மற்றும் எஸ்யூவி அம்சங்கள் கலவையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட சொகுசு மாடலை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது. இதுவரை உலக அளவில் 2.50 லட்சம் எக்ஸ்6 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

இறக்குமதி

இறக்குமதி

இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. அமெரிக்காவின் ஸ்பார்ட்டன்பர்க் ஆலையிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

முன்பக்கத்தில் பெரிய சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பு, புதிய பம்பர், ஆகியவை காருக்கு எஸ்யூவி வகை மாடலாக கம்பீரத்தை கொடுக்கிறது. அப்படியே பக்கவாட்டுக்கு போனால் சற்று குழப்பமான கூபே மற்றும் எஸ்யூவி வகை அமைப்பில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இந்த டிசைனுக்கு உலக அளவில் பல ரசிகர்களை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 பெற்றிருக்கிறது. பின்புறத்தில் புதிய எல்இடி டெயில்லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

உட்புறத்தில் புதிய டேஷ்போர்டு, புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் மீட்டர் கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎம்டபிள்யூவின் பிரத்யேக ஐ- ட்ரைவ் வசதியும் இதில் உண்டு.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் பெட்ரோல் மாடலில் 553 எச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் வழங்கும் 4.4 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. டீசல் மாடலில் 313 பிஎஸ் பவரையும், 630என்எம் டார்க்கையும் வழங்கும் 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜர் கொண்ட எஞ்சின் உள்ளது. மேலும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது. பேடில் ஷிப்ட் வசதியும் உண்டு.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், கார்னர் பிரேக் கன்ட்ரோல், கிராஷ் சென்சார், 6 உயிர்காக்கும் காற்றுப் பைகள் உள்ளன.

விலை

விலை

ரூ.1.15 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இது தனித்துவமான வகையிலான க்ராஸ்ஓவர் மாடலாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 23, 2015, 16:53 [IST]
English summary
All three manufacturers have planned multiple launches for 2015 and now BMW has launched their all-new X6 SAV(Sports Activity Vehicle) in India. This is the second generation model and has been launched in Bengaluru.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+