புதிய பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன், தகவல்கள்!
டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரின் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய மாடல் முறைப்படி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், அதிகாரப்பூர்வ படங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
ஹெட்லைட் டிசைன் மாறுதல் கண்டுள்ளது. தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் 1 சீரிஸ் காரைவிட இதன் ஹெட்லைட் கூர்மையான வளைவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பம்பர் டிசைனும் காரின் தோற்றத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. பின்புறத்தில் அதிக மாறுதல்கள் செய்யப்படவில்லை. டெயில் லைட்டில் மட்டும் மாற்றங்கள் தென்படுகிறது.

சிறப்பம்சங்கள்
முதல்முறையாக எல்இடி ஹெட்லைட்டுகள் ஆப்ஷனலாக பெற்றுக்கொள்ளும் வசதியுடன் வருகிறது புதிய 1 சீரிஸ் கார். எஃபிசியன்ட் டைனமிக் தொழில்நுட்பமும் இந்த காரின் முக்கிய தொழில்நுட்ப வசதியாக இருக்கும்.

நவீன தொழில்நுட்ப வசதிகள்
ஆட்டோமேட்டிக் ஏசி, ரெயின் சென்சார், பிஎம்டபிள்யூ ரேடியோ புரொஃபஷனல் மற்றும் ஐடிரைவ் ஆப்ரேட்டிங் சிஸ்டம், ரேடார் துணையுடன் இயங்கும் ஆக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், பார்க் அசிஸ்ட் போன்ற ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த காரில் வழங்கப்படும்.

எஞ்சின்
பிஎம்டபிள்யூ 118ஐ: 136 எச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்
பிஎம்டபிள்யூ 120ஐ: 170 எச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்
பிஎம்டபிள்யூ 125ஐ: 218 எச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்
பிஎம்டபிள்யூ 116டி: 116 எச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்
இந்த எஞ்சின்கள் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கும்.

இந்திய பிரவேசம்
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








