பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எம் ஸ்போர்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
இந்தியாவில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடலுடன், அதன் எம் ஸ்போர்ட் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
வால்வோ வி40, ஆடி க்யூ3 எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் வகையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்திருக்கும் இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்
ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் புதிய எக்ஸ்1 எம் ஸ்போர்ட் மாடல் கிடைக்கும். புதிய மாடலில் குறிப்பிட்டு கூறத்தக்க அம்சமாக, காரின் பம்பர்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அல்பைன் ஒயிட் அல்லது லீ மான்ஸ் புளூ என்ற இரண்டு விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

சிறப்புகள்
இந்த காரில் இருக்கும் 18 இன்ச் அலாய் வீல்களும் காருக்கு கம்பீரத்தை வழங்குகிறது. இன்டிரியரில் புதிய லெதர் கவருடன் கூடிய எம் ஸ்போர்ட் ஸ்டீயரிங் வீல், நூல் தையல் அலங்காரத்துடன் கூடிய இருக்கைகள், அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை குறிப்பிட்டு கூற வேண்டியவை.

எஞ்சின்
புதிய எக்ஸ்1 எம் ஸ்போர்ட் எஸ்யூவி மாடலில் 184 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கூடிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

செயல்திறன்
இந்த காரின் சக்திவாய்ந்த எஞ்சின் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 7.7 வினாடிகளில் எட்ட உதவுகிறது. லிட்டருக்கு 17.05 கிமீ மைலேஜ் தரும் என்று பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது.

விலை
ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல், பிரேக் எனர்ஜி ரீஜெனரேசன், ரன் ஃப்ளாட் டயர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க தொழில்நுட்பங்கள். ரூ.39.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








