2017 ஏப்ரல் முதல் நாடு முழுவதும் வாகனங்களுக்கான பிஎஸ்- 4 விதி அமல்!

By Saravana

2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் நாடுமுழுவதும் பிஎஸ்- 4 மாசுக் கட்டுப்பாட்டு விதி அமலுக்கு வர இருக்கிறது.

வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையால் சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் மாசு ஏற்படுகிறது. வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு அளவை குறைப்பதற்காக, பாரத் ஸ்டேஜ் என்ற பெயரிலான விதிமுறை அமலில் இருந்து வருகிறது.

BS 4

இது எரிபொருளின் தரத்தை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு தக்கவாறு, வாகனங்களின் எஞ்சினிலும் மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், பெருநகரங்களில் வாகனப் பெருக்கத்தால் ஏற்பட்டிருக்கும் காற்று மாசை குறைப்பதற்காக பாரத் ஸ்டேஜ்- 4 விதி சில ஆண்டுகளுக்கு முன் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த விதியை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-4 மாசு விதிமுறைக்கு உட்பட்ட வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். வாகன தயாரிப்பாளர்களும் இந்த விதிமுறைக்கு உட்பட்டே வாகனங்களை தயாரிக்க முடியும்.

Most Read Articles
English summary
Delhi was recently reported as the most polluted city in the world. India currently is not very stringent on emission norms and vehicle age, however, that is all set to change. They have now finalised that no manufacturer can sell or an individual can register a vehicle that does not pass BS-4 emission norms. It will be mandatory for vehicles to pass emission norms from April, 2017.
Story first published: Tuesday, June 2, 2015, 16:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X