புகாட்டியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய ஃபோக்ஸ்வேகன்!

Written By:

சூப்பர் கார் என்றவுடன் நினைவுக்கு வரும் முன்னணி பிராண்டு புகாட்டிதான். அந்த நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த கார்கள் உலக அளவில் பெரும் மதிப்பையும், புகழையும் சம்பாத்தித்து வைத்திருக்கின்றன.

மேலும், உலகின் அதிவேகமான தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமையை புகாட்டி வேரான் சூப்பர் கார் பெற்றிருந்தது. இந்தநிலையில், புகாட்டி வேரான் கார் உற்பத்தி இலக்கு முடிந்து, புகாட்டி சிரோன் என்ற புதிய ஹைப்பர் காரை ரிலீஸ் முயற்சியில் அந்த நிறுவனம் இருந்து வருகிறது.

இந்த சூழலில், புகாட்டி பிராண்டின் எதிர்காலமே தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது. இதனால், புகாட்டி சிரோனுக்காக காத்திருந்த ஆட்டோமொபைல் உலகத்தினரும், புகாட்டி ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

புகாட்டிக்கு வந்த சோதனை

புகாட்டிக்கு வந்த சோதனை

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகாட்டி நிறுவனம், தற்போது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், மாசு அளவு மோசடியில் சிக்கியிருக்கும் ஃபோக்ஸ்வேகன் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இதனால், புகாட்டி பிராண்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

 நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

மாசு அளவு மோசடிக்காக, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பல ஆயிரம் கோடிகளை அபராதமாக செலுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன், பங்குச் சந்தை சரிவு, விற்பனை சரிவு மற்றும் ரீகால் செய்ய வேண்டிய கார்களுக்கான செலவீனம் என பல அடுக்கடுக்கான நிதி பிரச்னையில் சிக்கியிருக்கிறது.

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தை, மீட்டெடுப்பதற்கு, வலி மிகுந்த பல முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதாக அந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் மத்தியாஸ் முல்லர் தெரிவித்திருக்கிறார்.

சிக்கலில் சிரோன் திட்டம்

சிக்கலில் சிரோன் திட்டம்

சிக்கன நடவடிக்கைகளால், நஷ்டத்தில் இயங்கி வரும் புகாட்டி பிராண்டுக்கும் முடிவு கட்டவும் அந்த நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வரும் மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட இருந்த புகாட்டி சிரான் காரின் நிகழ்வையும் ரத்து செய்யவும் ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக ஃபோக்ஸ்வேகன் இன்னும் உறுதி செய்யவில்லை. ஒருவேளை, புகாட்டி சிரோன் கார் திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் முடக்கினால், அது பெரும் ஏமாற்றத்தை தருவதாகவே அமையும்.

பிராண்டு இமேஜ்

பிராண்டு இமேஜ்

கடந்த காலங்களில் புகாட்டி வேரான் கார் நஷ்டத்திற்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனாலும், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தொழில்நுட்ப வல்லமையை உலகுக்கு எடுத்துரைக்கும் மாடல் என்ற பெருமைக்காகவே விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், புகாட்டி சிரோன் கார் திட்டத்தை நிறுத்துவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்புடையது அல்ல...

ஏற்புடையது அல்ல...

மாசு அளவு மோசடியால் தனது பிராண்டின் சிறப்பை இழந்து தவிக்கும் ஃபோக்ஸ்வேகன் புதிய புகாட்டி சிரோன் காரை அறிமுகம் செய்வதன் மூலமாக, இழந்த தனது மதிப்பை சிறிது மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். புகாட்டி சிரோன் திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் தொடருமா என்பது குறித்த முடிவை அறிந்து கொள்ள ஆட்டோமொபைல் உலகத்தினர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

 
English summary
Volkswagen Emission Scandal Effect: Bugatti Chiron Could Be In Trouble.
Story first published: Thursday, October 8, 2015, 13:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark