மணிக்கு 500 கிமீ வேகம்... புதிய புகாட்டி கார் பற்றிய பரபரப்புத் தகவல்கள்!!

Written By:

புதிய புகாட்டி ஹைப்பர் கார் குறித்த பரபரப்புத் தகவல்கள் ஆன்லைன் மீடியாக்களில் வெளியாகியுள்ளன.

புகாட்டி வேரான் கார் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வரும் இந்த புதிய ஹைப்பர் கார் தற்போது புகாட்டி சிரான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், ஆட்டோஜிஸ்பாட் என்ற தளத்தில் புகாட்டி சிரான் கார் பற்றி முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தரிசனம்

தரிசனம்

துபாயிலுள்ள செயிண்ட் ரெஜிஸ் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு புகாட்டி சிரான் கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது தெரிவிக்கப்பட்ட கார் விபரங்கள் தற்போது ஆன்லைன் மீடியா வழியாக வெளியுலகுக்கு பரவி வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

புகாட்டி வேரான் காரில் இருந்த அதே எஞ்சின்தான். ஆனால், 300 பிஎஸ் அளவுக்கு கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கிறது. புதிய புகாட்டி சிரான் காரில் 1,500 பிஎஸ் பவரையும், 1,500எ என்எம் டார்க்கையும் வழங்கக்கூடிய 8.0 லிட்டர் டபிள்யூ-16 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 கூடுதல் ரேடியேட்டர்கள்

கூடுதல் ரேடியேட்டர்கள்

புகாட்டி வேரான் காரைவிட அதிக சக்தியும், வேகமும் கொண்ட இந்த காரில் வேரான் காரைவிட கூடுதலாக 5 ரேடியேட்டர்கள் சேர்க்கப்பட்டு, எஞ்சின் குளிர்விப்பு அமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

செயல்திறன்

செயல்திறன்

0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.3 வினாடிகளில் தொட்டுவிடும் திறன் கொண்ட புதிய புகாட்டி சிரான் கார், 0 - 300 கிமீ வேகத்தை 15 வினாடிகளில் தொட்டுவிடுமாம். அப்படியெனில், எனவே, இது கட்டுக்கடங்காத காளையாக ஓட்டுனர்களுக்கு சவால் விடும்.

அப்படியா...

அப்படியா...

புகாட்டி வேரான் கார் மணிக்கு 415 கிமீ வேகம் கொண்டதாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், உலக சாதனை படைத்தபோது, மணிக்கு 431.0 வேகத்தை தொட்டது. ஆனால், புதிய புகாட்டி சிரான் கார் மணிக்கு 500 கிமீ வேகம் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்று அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகின் தயாரிப்பு நிலை மாடல்களில் அதிவேகம் கொண்ட கார் மாடலாக வருகிறது.

சக்கரங்கள்

சக்கரங்கள்

முன்புறத்தில் 20 இன்ச் சக்கரங்களும், பின்புறத்தில் 21 இன்ச் சக்கரங்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. மிச்செலின் பைலட் ஸ்போர்ட் PAX என்ற டயர் மாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும். முன்புறத்தில் 420மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 400மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் உள்ளது.

முன்பதிவு

முன்பதிவு

மொத்தமாக 500 புகாட்டி சிரான் கார்களை விற்பனை செய்ய புகாட்டி இலக்கு வைத்திருக்கிறது. அதில், 120 கார்களுக்கு ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டதாகவும் அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில், இந்த புதிய புகாட்டி சிரான் ஹைப்பர் கார் முதல்முறையாக பொது பார்வைக்கு வர இருக்கிறது.

 
English summary
Bugatti Chiron Hyper Car details surfaced In Online.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark