பிஎம்டபிள்யூ ஐ3 காரின் வசதிகளை கட்டுப்படுத்தும் ஸ்மார்ட்வாட்ச்!

By Saravana

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த மின்னணு நுகர்வோர் கண்காட்சியில், கார் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களை போட்டி போட்டு அறிமுகம் செய்தன. அதில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளில் ஒன்று காரின் முக்கிய வசதிகளை ரிமோட் கன்ட்ரோல் நுட்பத்தில் கட்டுப்படுத்தும் கைக்கடிகாரம் போன்ற சாதனங்கள்தான்.

ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச் குறித்து ஏற்கனவே தகவல் வழங்கியிருந்தோம். அதைத்தொடர்ந்து, பிஎம்டபிள்யூ நிறுவனமும் தனது ஐ3 எலக்ட்ரிக் காரின் வசதிகளை புதிய ஸ்மார்ட்வாட்ச் மூலம் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

Smartwatch

கைக்கடிகாரம் போன்று கட்டிக் கொள்ளக்கூடிய இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மூலம் காரின் சார்ஜ் நிலை பற்றிய தகவல்களை பெற முடியும் என்பதோடு, ஏசியையும் வெளியிலிருந்து ஆன்/ஆஃப் செய்ய முடியும். மேலும், வாய்மொழி உத்தரவு மூலம் இந்த வசதிகளை பெற முடியும் என்பதுதான் கூடுதல் விசேஷம்.

சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் மூலம் இந்த வசதிகளை பெற முடியும். ரிமோட் கன்ட்ரோல் முறையல் காரை பூட்டி திறக்கும் வசதியை இந்த சாதனத்தில் கொடுப்பதற்கான முயற்சிகளை பிஎம்டபிள்யூ செய்து கொண்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 10, 2015, 15:31 [IST]
English summary
Consumer Electronics Show (CES) has been a big venue for carmakers as well. Manufacturers like Audi, BMW, Mercedes-Benz and Hyundai showcased some of their newest smart gadgets that help people interact with their cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+