சென்னையில் வெள்ளம் எதிரொலி: நாட்டின் பிற பகுதிகளிலும் கார் உற்பத்தி பாதிப்பு

By Saravana

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

இதன் எதிரொலியாக நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வாகன ஆலைகளிலும் உதிரிபாகங்கள் சப்ளை முடங்கியிருப்பதால், உற்பத்தியில் பாதிப்பு ஏற்பபட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள டொயோட்டா கார் ஆலையில் கார் உற்பத்தி குறைக்கப்பட்டிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து 50க்கும் மேற்பட்ட சப்ளையர்களிடமிருந்து உதிரிபாகங்கள் பெறப்படுகிறது.

தற்போது சென்னை மழை வெள்ளம் காரணமாக உதிரிபாகங்கள் சப்ளை தடைபட்டிருப்பதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை உற்பத்தியை நிறுத்தியதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

chennai flood effect - auto parts Supply disrupted across india

இதேபோன்று, மஹிந்திரா நிறுவனமும் உதிரிபாக சப்ளையில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாக உற்பத்தியை குறைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இந்த வார துவக்கத்திலிருந்து பல வாகன ஆலைகளிலும், வாகன உதிரிபாக ஆலைகளும் மீண்டும் செயல்பட துவங்கியிருக்கின்றன.

ஆனால், முழு அளவிலான உற்பத்தியை எட்டுவதற்கு மேலும் சில நாட்கள் பிடிக்கும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 10, 2015, 10:29 [IST]
English summary
Floods in Chennai and other parts of Tamilnadu has created huge havoc. This has hit the Automobile industry also. Due to these floods, Auto parts supply has been disrupted very badly, which in turn slows down manufacturing also.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+