சென்னையில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளை காட்டும் 'லைவ் மேப்' வசதி!

By Saravana

சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தண்ணீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டன. வீட்டில் சிக்கியவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கூட வெளியேற முடியாத அவல நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், மீட்புப் பணிகளில் முப்படைகளும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தாண்டி தன்னார்வம் கொண்ட இளைஞர்களும் மீட்புப் பணிகளில் இறங்கியிருக்கின்றனர். ஒட்டுமொத்த தமிழகமும் தற்போது சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களையும், உதவிகளையும் அவசர கதியில் துவங்கியுள்ளன.

Chennai Live Map

இந்தநிலையில், சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சாலைகள் குறித்த தகவல்களை 'லைவ் மேப்' எனப்படும் நிகழ்நேர வரைபடம் உதவியுடன் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில், வெள்ளம் பாதித்த சாலைகள் குறித்த சாலைகள பதிவு செய்யவும், அவற்றை அறிந்து கொண்டு தவிர்ப்பதற்குமான வசதியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

உறவினர்களையும், நண்பர்களையும் தெரிந்து கொள்ள அல்லது அழைத்து வரச் செல்வோர்க்கு இது உதவிகரமாக இருக்கும் என்று நம்பலாம்.

லைவ் மேப்பை காண இங்கே க்ளிக் செய்க.

Most Read Articles
English summary
Normal life has been crippled in Chennai as incessant rain continues to pound the capital city of Tamil Nadu. Meanwhile, a Live map has been launched to help people in the city. Whoever will navigate through the map, will be able to see a clear picture of the current situation and will be able to avoid waterlogged areas and roads.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X