இந்தியாவின் வாகன நெருக்கடி மிகுந்த டாப்- 5 நகரங்கள்... சென்னை முதலிடம்!
இந்தியாவின் அதிக வாகன நெருக்கடி கொண்ட நகரம் என்றால் அது டெல்லியாகத்தான் இருக்கும் என்று கருதுகிறோம். ஆனால், அந்த பட்டியலில் சென்னைதான் முதலிடத்தை பெற்றிருக்கிறது.
ஒரு கிலோமீட்டர் சாலைக்கு அதிக வாகனனங்கள் கொண்ட நகரம் சென்னைதானாம். ஆனால், இந்த பட்டியலில் இருக்கும் நகரங்களில் ஒரே ஒரு ஆறுதல் விஷயம் சென்னைவாசிகளுக்கு கிடைத்திருக்கிறது. அதனை ஸ்லைடரில் காணலாம்.

05. டெல்லி
இந்தியாவிலேயே அதிக வாகனங்களை கொண்ட நகரம் டெல்லி. இங்கு 73 லட்சம் வாகனங்கள் இருக்கின்றன. ஆனால், வாகன நெருக்கடியில் குறைவான நகரம் என்ற பெயரை பெற்றிருக்கிறது. அதாவது, ஒரு கிலோமீட்டருக்கு 245 வாகனங்கள் என்ற நிலையை டெல்லி பெற்றிருக்கிறது. இதற்கு காரணம், அங்கு 30,000 கிமீ தூரத்துக்கு சாலை கட்டமைப்பை பெற்றிருப்பதுதானாம். ஆனால், காற்று மாசுபடுதலில் முதன்மை நகரமாக டெல்லி தெரிவிக்கப்பட்டுள்ளது.

04. கொல்கத்தா
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. கொல்கத்தாவில் ஒரு கிலோமீட்டருக்கு 355 வாகனங்கள் இருக்கின்றன.

03. ஹைதராபாத்
நாட்டின் வாகன நெருக்கடி மிகுந்த நகரங்களின் பட்டியலில் ஹைதராபாத் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் நகரில் 33.8 லட்சம் வாகனங்கள் இருக்கிறதாம். இங்கு ஒரு கிலோமீட்டருக்கு 723 வாகனங்கள் இருக்கின்றனவாம்.

02. புனே
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் புனே நகரம் உள்ளது. இந்த நகரத்தில் 22.6 லட்சம் வாகனங்கள் இருக்கிறதாம். அதாவது, மும்பையைவிட அதிகமாம். புனே நகரில் ஒரு கிலோமீட்டருக்கு 1,260 வாகனங்கள் என்ற நிலை உள்ளது. இதையெல்லாம் விஞ்சி விட்டது சென்னையின் வாகன நெருக்கடி அளவு.

01. சென்னை
இந்தியாவிலேயே வாகன நெருக்கடி அதிகம் கொண்ட நகரம் சென்னைதான். இங்கு 37 லட்சம் வாகனங்கள் உள்ளன. சென்னை நகரில் ஒரு கிலோமீட்டருக்கு 2,093 வாகனங்கள் என்ற அளவில் உள்ளதாம். அதாவது, டெல்லியைவிட கிட்டத்தட்ட 9 மடங்கு கூடுதல் வாகன நெருக்கடி கொண்டதாக இருக்கிறது.

என்ன காரணம்?
டெல்லியில் 30,000 கிமீ தூரத்திற்கான சாலை கட்டமைப்பு இருக்கும் நிலையில், சென்னையில் வெறும் 1,800 கிமீ தூரம் கொண்ட சாலைக்கட்டமைப்பு வசதி இருக்கிறதாம். ஆனால், இந்த பட்டியலில் இருக்கும் நகரங்களில் குறைந்த காற்று மாசு கொண்ட நகரம் சென்னைதான் என்பது ஒரே ஆறுதல்.


Click it and Unblock the Notifications








