தள்ளுபடிகளுடன் 100 மணி நேர சிறப்பு கார் விற்பனையை துவங்கியது செவர்லே!
சிறப்புச் சலுகைகளுடன் 100 மணி நேரத்திற்கான கார் விற்பனையை செவர்லே துவங்கியிருக்கிறது.
வரும் 21ந் தேதி வரை இந்த சிறப்பு தள்ளுபடிகளை செவர்லே கார்களை முன்பதிவு செய்பவர்கள் பெற முடியும்.

இந்த சிறப்பு விற்பனையின்படி, செவர்லே க்ரூஸ் காருக்கு 1,00,999 ரூபாய் வரையிலும் சேமிப்பையும், பீட் காருக்கு ரூ.70,499 வரையிலான சேமிப்பையும், செயில் காருக்கு ரூ.64,499 வரையிலான சேமிப்பையும் பெற முடியும்.
செவர்லே என்ஜாய் காருக்கு ரூ.62,500 வரையிலான சேமிப்பை வாடிக்கையாளர்கள் பெறலாம். 2 ஆண்டுகளுக்கான கூடுதல் வாரண்டி காலம், 2 கிராம் தங்க நாணயம், ரூ.10,000 மதிப்புடைய ஆக்சஸெரீகள் மற்றும் ரூ.34,000 மதிப்புடைய எல்இடி டிவி போன்றவற்றை வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பெறும் வாய்ப்பு இருக்கிறது.
கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள செவர்லே டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








