வருகிறது செவர்லே பீட் காரில் அடிப்படையில் புதிய மினி செடான் கார்!

By Saravana

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார் மார்க்கெட்டின் வளர்ச்சியை கண்டு அனைத்து நிறுவனங்களுமே புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் விரைவில் ஆஸ்பயர் மினி செடான் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத்தொடர்ந்து, மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் செவர்லே பிராண்டில் புதிய மினி செடான் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

இந்தியாவில் 10 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது. அதில், ஒன்றாக புதிய மினி செடான் காரும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பீட் பிளாட்ஃபார்ம்

பீட் பிளாட்ஃபார்ம்

தற்போது விற்பனையில் இருக்கும் பீட் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் புதிய மினி செடான் கார் உருவாக்கப்பட இருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

தற்போது பீட் காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் புதிய மினி செடானிலும் பயன்படுத்தபடும் வாய்ப்புள்ளது. ஆனால், பீட் டீசல் மாடலில் இருக்கும் 1.0 லிட்டர் எஞ்சினுக்கு பதிலாக, செயில் யுவா ஹேட்ச்பேக் காரில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் புதிய மினி செடான் காரில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அறிமுகம்

அறிமுகம்

2017ம் ஆண்டு பீட் கார் அடிப்படையிலான புதிய மினி செடான் கார் விற்பனைக்கு கொண்டு வர ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது.

பெரும் முதலீடு

பெரும் முதலீடு

இந்தியாவில் 10 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கும், வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.6,400 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக கடந்த வாரம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, August 3, 2015, 9:55 [IST]
English summary
Chevrolet will use the Beat as their base for its 2017 compact sedan for Indian markets. It is too early to announce engine options, however, we are sure it would share engine with its hatchback version.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+