கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2015 செவர்லே என்ஜாய் அறிமுகம்- விபரம்

By Saravana

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய செவர்லே என்ஜாய் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

முகப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் உள்பக்கத்தில் கூடுதல் வசதிகள் மற்றும் கண்ணை கவரும் அம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புற மாற்றங்கள்

வெளிப்புற மாற்றங்கள்

வெளிப்புறத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், பி பில்லர் மற்றும் சி பில்லர் ஆகியவை கருப்பு நிறம் கொடுக்கப்பட்டு வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது.

இன்டிரியர் மாற்றங்கள்

இன்டிரியர் மாற்றங்கள்

உள்புறத்தை பொறுத்தவரையில், ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் மற்றும் புளூடூத் வசதிக்கான சுவிட்சுடன் புதிய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏசி வென்ட், ஹேண்ட் பிரேக், கியர் நாப் மற்றும் கைப்பிடிகள் க்ரோம் பூச்சுடன் வந்துள்ளது. புதிய அப்ஹோல்ஸ்டரியும் பிரிமியம் மாடலாக உட்புறத்தை காட்டுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் தொடர்ந்து கிடைக்கும். இதேபோன்று, எல்எஸ், எல்டி மற்றும் எல்டிஇசட் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படும்.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

டாப் வேரியண்ட்டில் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள் செவர்லே என்ஜாய் எம்பிவி காரின் முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இருக்கின்றன.

விலை

விலை

பேஸ் மாடல் ரூ.6.24 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். அதிக இடவசதி மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் என்று செவர்லே நம்பிக்கை தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 8, 2015, 10:04 [IST]
English summary
The American based manufacturer General Motors has now provided its Chevrolet Enjoy MPV with a facelift for 2015. This new version will be priced at INR 6,24,000 ex-showroom, Delhi.
மேலும்... #chevrolet #enjoy #செவர்லே
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+