ஷெவ்ரோலே கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்

By Ravichandran

தற்போது தொடர்ந்து பண்டிகைகால கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவதால், அதை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு விதமான சிறப்பு சலுகைகளை ஷெவ்ரோலே இந்தியா வழங்கி வருகிறது. எனினும், அந்நிறுவனத்தின் சார்பாக வழங்கப்படும் பண்டிகைகால ஆஃபர்களில், நான்கு கார்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

வரும் 31ந் தேதி வரை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த ஷெவ்ரோலே தயாரிப்புகளை புக்கிங் செய்து, பல்வேறு வகையான ஆஃபர்களை பெறலாம். ஷெவ்ரோலேவின் பீட், செயில், என்ஜாய் மற்றும் க்ரூஸ் உள்ளிட்ட கார்கள் இந்த பண்டிகால ஆஃபர்களில் கிடைக்கின்றது. ஷெவ்ரோலேவின் எந்தெந்த கார்கள், என்னென்ன ஆஃபர்களுடன் கிடைக்கின்றது என்ற தகவல்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 ஷெவ்ரோலே பீட்;

ஷெவ்ரோலே பீட்;

பீட் ஹேட்ச்பேக் காருக்கு 3+2 வருடங்களுக்கான கூடுதல் காலத்திற்கான வாரண்டியை வழங்குகிறது. மேலும், ஒரு வருடத்திற்கான இலவச இன்ஷூரன்ஸ் மற்றும் மூன்று வருடங்களுக்கான பராமரிப்பு சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ஷெவ்ரோலே செயில்;

ஷெவ்ரோலே செயில்;

செவ்ரோலேவின் செயில் காருடன் மூன்று வருடங்களுக்கான பராமரிப்பு திட்டத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆரம்ப ரக செடானுடன் 3+2 வருடங்களுக்கான கூடுதல் கால வாரண்டியையும் ஷெவ்ரோலே வழங்குகிறது.

 ஷெவ்ரோலே என்ஜாய்;

ஷெவ்ரோலே என்ஜாய்;

ஷெவ்ரோலேவின் இந்த எம்பிவி ரக கார் மீது ஒற்றை ஆஃபர் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஷெவ்ரோலே என்ஜாய் ரக கார் மீது வாடிக்கையாளர்களுக்கு 3+2 வருடங்களுக்கான கூடுதல் கால வாரண்டி வசதி கிடைக்கும்.

 ஷெவ்ரோலே க்ரூஸ்;

ஷெவ்ரோலே க்ரூஸ்;

புதிய ஷெவ்ரோலே க்ரூஸ் வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது. இந்த க்ரூஸ் செடான் காருடன் மூன்று வருடங்களுக்கான பராமரிப்பு சலுகைகள், 3+2 வருடங்களுக்கான கூடுதல் காலத்திற்கான வாரண்டி மற்றும் 9.9 சதவிகித வட்டி விகிதத்தில் கடன் வசதியும் கிடைக்கின்றது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

இந்த ஆஃபர்கள் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள ஷெவ்ரோலே நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 14, 2015, 11:21 [IST]
English summary
Chevrolet India has organised several deals and offers for this 2015 festive season. In their range of cars, only four of their models are bundled with offers for the upcoming festive season.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+