செவர்லே வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள் - விபரம்!

By Ravichandran

2015-ஆம் வருடம் முடிவடையும் தருவாயில், செவர்லே நிறுவனம் தங்களின் சில மாடல்களின் மீது ஆஃபர்களை வழங்குகின்றனர்.

வருட கடைசியில், பல்வேறு கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான ஆஃபர்களை வழங்குவது வழக்கம். கார் நிறுவனங்கள், சில நேரங்களில் தங்களின் விற்பனை இலக்குகளை எட்டுவதற்கும், சில நேரங்களில் வாடிக்கையாளர்களை சந்தோஷபடுத்துவதற்காகவும் இப்படி ஆஃபர்களை வழங்குகின்றனர்.

என்ன என்ன கார்கள் மீது, எப்படிபட்ட ஆஃபர்கள் கிடைக்கின்றது என வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கிடைக்கும் ஆஃபர்கள்;

கிடைக்கும் ஆஃபர்கள்;

செவர்லே நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் மீதும், 10,000 ரூபாய் முதல் 1.38 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆஃபர்கள் கிடைக்கின்றது.

இந்த ஆஃபர்கள், டிஸ்கவுண்ட் என்ற அடிப்படையில் வழங்கபடுகின்றது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு, நிச்சய பரிசுகள் அல்லது இதர லாபங்களை வழங்கும் வகையில், அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தபடுகிறது.

எந்த மாடல்கள் மீது என்ன ஆஃபர்கள்;

எந்த மாடல்கள் மீது என்ன ஆஃபர்கள்;

செவர்லே பீட் ஹேட்ச்பேக் மீதான டிஸ்கவுண்ட் - ரூபாய் 76,000

செவர்லே செயில் காம்பேக்ட் செடான் மீதான டிஸ்கவுண்ட் - ரூபாய் 75,000

செவர்லே என்ஜாய் மீதான டிஸ்கவுண்ட் - ரூபாய் 77,000

செவர்லே க்ரூஸ் செடான் மீதான டிஸ்கவுண்ட் - ரூபாய் 1,38,500

ஆஃபர்கள் கிடைக்காத மாடல்கள்

ஆஃபர்கள் கிடைக்காத மாடல்கள்

செவர்லேவின் பல்வேறு மாடல்களுக்கு ஆஃபர்கள் வழங்கப்படும் வேலையில், புதிதாக அறிமுகம் செய்யபட்ட செவர்லே ட்ரெயில்பிளேசர் மீது எந்த விதமான ஆஃபர்களும், டிஸ்கவுண்ட்களும் கிடையாது என்பது குறிப்பிடதக்கது.

கார்கள் வெல்ல வாய்ப்பு;

கார்கள் வெல்ல வாய்ப்பு;

மேற்குறிப்பிட்ட ஆஃபர்களையும், டிஸ்கவுண்ட்களையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் 2 கார்கள் வெல்லும் வாய்ப்புகளை செவர்லே வழங்குகின்றது.

அதோடு மட்டுமல்லாமல், அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் 1 லட்சம் ரூபாய் மதிப்பு மிக்க, 750 கேஷ் (பண) பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளயும் செவர்லே நிறுவனம் அளிக்கின்றது.

ஆஃபர்கள் கிடைக்கும் காலம்;

ஆஃபர்கள் கிடைக்கும் காலம்;

செவர்லே நிறுவனம் சார்பாக, வழங்கபடும் இந்த அனைத்து ஆஃப்ர்களும், டிஸ்கவுண்ட்களும், சேமிப்பு வாய்ப்புகளும் இந்த டிசம்பர் 31, 2015 வரை மட்டுமே வழங்கபடும்.

சமீபத்திய அறிமுகம்;

சமீபத்திய அறிமுகம்;

செவர்லே நிறுவனம் சார்பாக, இந்திய சந்தைகளில், ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யபட்டது.

செவர்லே ட்ரெயில்பிளேசர், ஹூண்டாய் சான்ட்டா பீ, ஹோண்டா சிஆர்-வி, ஃபோர்டு என்டெவர் ஸ்போர்ட், மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் உள்ளிட்ட கார்களிடம் இருந்து போட்டிகளை எதிர்கொள்கின்றது.

ஆஃபர்கள் கிடைக்க செய்ய வேண்டியவை;

ஆஃபர்கள் கிடைக்க செய்ய வேண்டியவை;

செவர்லே நிறுவனம் மூலம் வழங்கபடும் இந்த ஆஃபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட்களை பெற, வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள செவர்லே டீலர்ஷிப்களிடம் சென்று, மேற்குறிப்பிட்ட ஆஃபர்கள் கார்களை புக்கிங் செய்ய வேண்டும்.

Article Published On: Monday, December 7, 2015, 15:44 [IST]
English summary
Chevrolet India gives year end offers and discounts on various models for their customers. These offers are primarily available in the form of discounts. All these offers, discounts, and savings shall be availed on Chevrolet Car models on or only till December 31, 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+