இந்தியாவில் செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி விரைவில் ரிலீஸ்!
இந்தியாவில் புதிய செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. செவர்லே இந்தியா இணையதளத்தில் இந்த புதிய மாடலின் விபரங்கள் சேர்க்கப்பட்டிருப்பதும், இந்த எஸ்யூவி விரைவில் வருவது உறுதியாகியிருக்கிறது.
பிரிமியம் எஸ்யூவி மாடல்களுடன் போட்டியிட இருக்கும் செவர்லே ட்ரையல்பிளேசர் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்
4,878மிமீ நீளம், 1,902மிமீ அகலம், 1,834மிமீ உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியின் வீல் பேஸ் 2,870மிமீ. இதன்மூலமாக, உட்புறத்தில் பயணிகளுக்கு போதிய இடவசதியை அளிக்கும்.

இருக்கை வசதி
இந்த எஸ்யூவியில் 7 பேர் அமர்ந்து பயணிக்கும் இருக்கை வசதியை கொண்டிருக்கும்.

எஞ்சின்
செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவியில் 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வருகிறது.

முக்கிய வசதிகள்
இந்த எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், பகல்நேர விளக்குகள், 7 இன்ச் டச்ஸ்கிரீன் கொண்ட மை லிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் வசதிகளும் இருக்கும்.

பாதுகாப்பு வசதிகள்
ஓட்டுனர், முன்புற பயணிக்கான ஏர்பேக்குகள், ப்ரீ டென்ஷனர் சீட்பெல்ட், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும்.


Click it and Unblock the Notifications








