320 கிமீ ரேஞ்ச் கொண்ட புதிய செவர்லே எலக்ட்ரிக் கார்!

அமெரிக்காவில், டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் புதிய எலக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

செவர்லே போல்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் கான்செப்ட் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 300கிமீ.,க்கும் மேலாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் பிரியர்களின் புருவத்தை உயர்த்தியிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


இலகு எடை

இலகு எடை

இந்த காரில் அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இலகு எடை கொண்டதாக இருக்கும். இதனால், மிகச்சிறந்த ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என ஜெனரல் மோட்டார்ஸ் கூறியிருக்கிறது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 321 கிமீ வரை செல்லும் என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த கார் 5 பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்டது.

குளோபல் மாடல்

குளோபல் மாடல்

செவர்லே ஸ்பார்க் எலக்ட்ரிக் கார் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த புதிய கார் அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் விற்பனை கொண்டு செல்லும் திட்டம் இருப்பதோடு, உலகின் சில குறிப்பிட்ட மார்க்கெட்டுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்ல ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மாற்றாக வருமா?

மாற்றாக வருமா?

இது செவர்லே ஸ்பார்க் காருக்கு மாற்றான மாடல் இல்லை என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

விலை

விலை

30,000 டாலர் விலையில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

விற்பனை

விற்பனை

அடுத்த ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

தெஸ்லாவுக்கு போட்டியா?

தெஸ்லாவுக்கு போட்டியா?

தெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இது அறிமுகம் செய்யப்படவில்லை என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஏனெனில், தெஸ்லா கார்களின் விலை 1 லட்சம் டாலர் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இது 30,000 டாலர் விலையில் விற்பனைக்கு செல்லும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 13, 2015, 11:10 [IST]
English summary
American car maker General Motors has unveiled new Chevrolet Bolt electric concept would have 300-plus km of electric range and cost about $30,000, and may come to market within a year or two.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+