கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர தர மதிப்பீடு பெற்ற ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவி!

By Saravana

சீனாவில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு தர சோதனையில் 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது ஹூண்டாய் ஐஎக்ஸ்25 எஸ்யூவி.

கடந்த ஆண்டு சீனாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய காம்பேக்ட எஸ்யூவி கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிப்பது இந்தியர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும், சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது பேஸ் மாடல் சிறப்பான மதிப்பீட்டை பெற்றிப்பதும் குறிப்பிடத்தக்கது.


4 விதமான சோதனைகள்

4 விதமான சோதனைகள்

பக்கவாட்டு ஏர்பேக்குகள் இல்லாத ஐஎக்ஸ்25 எஸ்யூவியின் பேஸ் மாடல் 4 விதமான கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. உலோக தடுப்பு மீது முழுமையாக முன்புறத்தை மோத செய்து ஒரு சோதனையும், 40 சதவீத அளவுக்கு முன்புறத்தை மோத செய்து இரண்டாவது சோதனையும், பக்கவாட்டுப் பகுதியில் மோதல் ஏற்படும் விளைவுகளை பார்ப்பதற்காக ஒரு சோதனையும், விப்பிளாஷ் எனப்படும் பயணிகளின் கழுத்துப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒரு சோதனையும் நடத்தப்பட்டது. அதில் கிடைத்த முடிவுகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

முன்புற மோதல் சோதனை

முன்புற மோதல் சோதனை

மணிக்கு 50 கிமீ வேகத்தில் காரை மோதச் செய்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஹூண்டாய் ஐஎக்ஸ்25 எஸ்யூவி மொத்தம் 18 புள்ளிகளுக்கு 15.89 புள்ளிகளை பெற்றது.

பக்கவாட்டு மோதல் சோதனை

பக்கவாட்டு மோதல் சோதனை

பக்கவாட்டில் மோத செய்து நடத்தப்பட்ட சோதனையில், அதிகபட்சமான 18 புள்ளிகளை அப்படியே பெற்று அசத்தியிருக்கிறது.

 40 சதவீத முன்புற மோதல் சோதனை

40 சதவீத முன்புற மோதல் சோதனை

மணிக்கு 64 கிமீ வேகத்தில், முன்புறத்தின் 40 சதவீத பகுதியை மோதி சோதனை செய்ததில், மொத்தம் 18 மதிப்பெண்களில் 14.11 மதிப்பெண்களை இந்த எஸ்யூவி பெற்றது.

விப்பிளாஷ் சோதனை

விப்பிளாஷ் சோதனை

குறைவான வேகத்தில் செல்லும்போது பயணிகளின் கழுத்துப்பகுதி எந்தளவு பாதிப்படைகிறது என்பதை காண்பதற்கான விப்பிளாஷ் சோதனையில் முழுமையான மதிப்பெண்களை இந்த எஸ்யூவி பெற்று அசத்தியுள்ளது. மணிக்கு 15.65 கிமீ வேகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இறுதி முடிவுகள்

இறுதி முடிவுகள்

மொத்தத்தில் புதிய ஹூண்டாய் ஐஎக்ஸ்25 எஸ்யூவியின் கட்டுமானத் தரம் மிகச்சிறப்பாக இருப்பதாக சீன என்சிஏபி அமைப்பு வெளியிட்ட சோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ரெனோ டஸ்ட்டருக்கு இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி நேரடி போட்டயாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 6, 2015, 11:55 [IST]
English summary

 China New Car Assessment Program (C-NCAP) has awarded the Hyundai ix25 five stars in terms of safety. The ix25 was recently launched in China. Four types of crash tests was conducted on the new compact SUV from the South Korean automaker, Hyundai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+