சென்னை ஆலையில் விரைவில் பஸ் உற்பத்தி: டெய்ம்லர் தகவல்
சென்னையில் அமைக்கப்பட்டு வரும், புதிய பஸ் ஆலையில் விரைவில் உற்பத்தி துவங்கப்பட இருப்பதாக டெய்ம்லர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சென்னை அருகே ஒரகடத்தில் ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனத்தின் புதிய பஸ் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய ஆலையில், பாரத் பென்ஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டுகளில் பஸ் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், சென்னையிலிருந்து எகிப்து நாட்டுக்கு பஸ் சேஸி ஏற்றுமதியை டெய்ம்லர் இந்தியா நிறுவனம் நேற்று துவங்கியது. இதற்கான செய்திக்குறிப்பில், வரும் இரண்டாவது காலாண்டிலிருந்து சென்னை ஆலையில் பஸ் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆலையில் ஆரம்ப கட்டத்தில் ஆண்டுக்கு 1,500 பஸ்களை உற்பத்தி செய்ய முடியும். விரிவாக்கம் செய்யும்போது ஆண்டுக்கு 4,000 பஸ்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலையை விரிவுப்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









