டிரைவர் உதவியில்லாமல் ஆட்டோபான் சாலையில் பயணித்த டெய்ம்லர் தானியங்கி டிரக்!

Posted By:

ஜெர்மனியின் ஆட்டோபான் விரைவு சாலையில் ஓட்டுனர் உதவி இல்லாமல், டெய்ம்லர் தானியங்கி டிரக் வெற்றிகரமாக இயக்கி பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டிருக்கும் மாடல்தான் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

பொது பயன்பாட்டு சாலையில் வைத்து அந்த டிரக் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டிருப்பது, தானியங்கி வாகனங்களின் வருகையில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

சிறப்பு அனுமதி

சிறப்பு அனுமதி

ஜெர்மனியின் ஆட்டோபான் சாலை கட்டமைப்பின் ஏ8 நெடுஞ்சாலையில் வைத்து டெய்ம்லர் தானியங்கி டிரக் இயக்கப்பட்டது. இதற்காக, ஜெர்மனி அரசிடம் டெய்ம்லர் நிறுவனம் சிறப்பு அனுமதி பெற்றிருந்தது.

பயண தூரம்

பயண தூரம்

ஆட்டோபான் ஏ8 நெடுஞ்சாலையில் 14 கிமீ தூரம் அந்த தானியங்கி டிரக் பயணித்தது. இருப்பினும், பாதுகாப்பு கருதி அந்த டிரக்கின் செயல்பாடுகளை ஓட்டுனர் ஒருவர் கண்காணித்தபடி இருந்தார்.

 ஆட்டோ பைலட் சிஸ்டம்

ஆட்டோ பைலட் சிஸ்டம்

சாட்டிலைட் நேவிகேஷன், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ரேடார்கள் மற்றும் கேமராக்களை ஒருங்கிணைத்த ஆட்டோ பைலட் கம்ப்யூட்டர் மூலமாக அந்த டிரக் இயங்கியது. அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகம் வரை அந்த டிரக் தொட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அருகில் மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களின் வேகத்துக்கு தக்கவாறு வேகத்தை மாற்றிக் கொள்ளும் வசதி, தானியங்கி பிரேக் சிஸ்டம் ஆகியவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இருக்கின்றன.

 மோசமான வானிலை

மோசமான வானிலை

பனிமூட்டம், மழை போன்ற மோசமான வானிலைகளில் ஆட்டோ பைலட் சிஸ்டத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்காது. எனவே, அப்போது ஓட்டுனருக்கு எச்சரிக்கை கொடுக்கும். ஓட்டுனர் கட்டுப்பாட்டை எடுக்கவில்லை எனில், சாலையோரமாக அந்த டிரக் தானியங்கி பிரேக் சிஸ்டம் மூலம் நின்றுவிடும்.

 சோதனை

சோதனை

ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் வைத்து இதுவரை 20,000 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த தானியங்கி டிரக் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

நெடுஞ்சாலைகளில் அதிக தூரம் டிரக்குகளை ஓட்டிச் செல்வதால் டிரைவர்கள் அயர்ந்து விபத்து ஏற்படுகிறது. இந்த ஆட்டோ பைலட் சிஸ்டம் பொருத்தப்பட்ட டிரக்குகள் மூலமாக விபத்துக்கள் குறையும் என்பதுடன், அதிக எரிபொருள் சிக்கனமும், கால விரயமும் தவிர்க்க முடியும்.

டெய்ம்லர் தானியங்கி டிரக் சோதனை வீடியோ

 

English summary
Daimler has tested a self driving truck in Germany under real world traffic conditions. The truck travelled for 14 kilometers, with a driver behind the wheel, but his hands off it.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more