டட்சன் நிறுவனத்தின் ‘டட்சன் டிசம்பர் மேஜிக்’ சலுகைகள் திட்டம் - விபரம்!

Written By:

டட்சன் நிறுவனத்தின் சார்பாக 'டட்சன் டிசம்பர் மேஜிக்' என்ற பெயரில் சலுகைகளும், சேமிப்புத் திட்டங்களும் வழங்கபடுகிறது.

2015-ஆம் ஆண்டு வருடம் நிறைவு அடைவதையொட்டி, ஏராளமான கார் நிறுவனங்கள் பல்வேறு வகையில் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் டட்சன் நிறுவனமும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வருடம் நிறைவு சலுகைகளை அறிமுகம் செய்துள்ளனர்.

டட்சன் நிறுவனம் சார்பாக, தரப்படும் ஆஃபர்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஆஃபர்கள் கிடைக்கும் நாட்கள்;

ஆஃபர்கள் கிடைக்கும் நாட்கள்;

டட்சன் நிறுவனம் மூலம் வழங்கபடும் இந்த சலுகைகள், 31 டிசம்பர் 2015 அன்றோ அல்லது அதற்கு முன்னர் வரை வாங்கபடும் கார்களுக்கு மட்டுமே கிடைக்க உள்ளது.

ஆஃபர்கள் கிடைக்கும் கார்கள்;

ஆஃபர்கள் கிடைக்கும் கார்கள்;

டட்சன் நிறுவனம் சார்பாக, இந்தியாவில் டட்சன் கோ மற்றும் டட்சன் கோ+ என்ற 2 கார்கள் மட்டுமே விற்கபடுகிறது. இந்த 2 கார்களையும், டட்சன் நிறுவனம் சலுகைகளுடன் வழங்கி வருகின்றது.

டட்டன் கோ மீதான ஆஃபர்கள்;

டட்டன் கோ மீதான ஆஃபர்கள்;

டட்சன் இந்தியாவின் கோ ஹேட்ச்பேக் காரின் டாப் வேரியண்ட் மாடல் தற்போது 3.84 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கபடுகிறது.

வழக்கமாக, டட்சன் கோ, 4.05 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கபடும்.

ஃபைனான்ஸ் தேர்வுகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள், 8.99 சதவிகிதத்தில் கார் கடன் வசதியை பெறலாம் என தெரிகிறது.

டட்டன் கோ+ மீதான ஆஃபர்கள்;

டட்டன் கோ+ மீதான ஆஃபர்கள்;

டட்சன் இந்தியாவின் கோ+ காம்பேக்ட் ஸ்டேஷன் வேகன், 4.76 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற சிறப்பு பண்டிகைகால விலையில் விற்கபடுகிறது.

டிசம்பர் மேஜிக் ஆஃபர் மூலம், கோ+ மாடல் காருடன் முதல் ஆண்டிற்கான இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கபடுகிறது.

ஃபைனான்ஸ் தேர்வுகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 8.99 சதவிகிதத்தில் கார் கடன் வசதியை பெறலாம் என தெரிகிறது.

டட்சனின் தாரக மந்திரம்;

டட்சனின் தாரக மந்திரம்;

டட்சன் இந்தியாவின் முக்கிய விற்பனை புள்ளியே (யூ.எஸ்.பி அல்லது தாரக மந்திரமே) சந்தை நிலவரத்திற்கு ஏற்ப போட்டிகரமான விலையில் கார்களின் விலைகளை நிர்ணயிப்பது தான் என தெரிகிறது.

டட்சனின் முக்கிய வாடிக்கையாளர்கள்;

டட்சனின் முக்கிய வாடிக்கையாளர்கள்;

டட்சன் இந்தியா, முதன் முறை கார் வாங்குபவர்களையும், சிறிய கார்களில் இருந்து பெரிய காருக்கு மாற துடிக்கும் வாடிக்கையாளர்களும் தான் என தெரிகிறது.

புதிய தயாரிப்புகள் அறிமுகம்;

புதிய தயாரிப்புகள் அறிமுகம்;

டட்சன் சார்பாக, டட்டன் கோ மற்றும் டட்டன் கோ+ என்ற இரு தயாரிப்புகள் மட்டுமே விற்கபடுகிறது.

ரெடி-கோ காம்பேக்ட் ஹேட்ச்பேக் மற்றும் கோகிராஸ் கிராஸ்ஓவர் என்ற பெயரில் இரு புதிய கார்களை, 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெனோ நிறுவனம் வழங்கும் 'டிசம்பர் செலிப்ரேஷன்ஸ்' - டிஸ்கவுண்ட்டுகள், ஆஃபர்கள் மழை துவங்கியது

செவர்லே வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள் - விபரம்!

ரிமம்பர் டிசம்பர் ஆஃபர்... டொயோட்டாவின் டிசம்பர் ஆஃபர் விபரம்!

செய்திகள் உடனுக்குடன்...

செய்திகள் உடனுக்குடன்...

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

English summary
Datsun December Magic are launched over the Go & Go+ Cars in India. Special pricing and offers are provided for the Go hatchback and Go+ compact station wagon. These offers from Datsun on its Cars are available on or before December 31, 2015 only.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark