டட்சன் கோ லிமிடேட் எடிசன் அறிமுகம்... முன்பதிவுக்கு முந்துங்கள்!!
பண்டிகை காலம் துவங்க இருப்பதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் முன்பதிவு படலம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இதனை மனதில் வைத்து புதிய கார் மாடல்களையும், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்பெஷல் எடிசன் மாடல்களையும் கார் நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன.
அந்த வகையில், டட்சன் கோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டட்சன் கோ NXT என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில் பல அத்தியாவசிய ஆக்சஸெரீகள் குறைவான விலையில் பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

விலை விபரம்

எண்ணிக்கை
வெறும் 1,000 கார்கள் மட்டுமே இந்த லிமிடேட் எடிசன் மாடலில் கிடைக்கும். எனவே, இந்த காரை வாங்க விரும்புவோர் உடனடியாக முன்பதிவு செய்து கொள்வது நலம்.

கூடுதல் வசதிகள்
ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், க்ரோம் பூச்சுடன் கூடிய புகைப்போக்கி குழாய் முனை, ரியர் பார்சல் ட்ரே, சைடு மோல்டிங், பியானோ பிளாக் ஃபினிஷிங் செய்யப்பட்ட இன்டிரியர் பாகங்கள் ஆகியவை இந்த காரின் மதிப்பை உயர்த்துவதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.

கூடுதல் மதிப்பு
ரூ.20,000 மதிப்புடைய கூடுதல் ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், ரூ.5,000 மட்டுமே கூடுதலாக விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும் டட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோதனையால் வந்த சோதனை!
கடந்த ஆண்டு நடந்த க்ராஷ் டெஸ்ட்டில் டட்சன் கோ காருக்கு பூஜ்ய மதிப்பீடு வழங்கப்பட்டது. மேலும், இந்த காரின் விற்பனையை இந்தியாவில் நிறுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்திய விதிகளுக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்களை டட்சன் கோ கார் கொண்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.

Click it and Unblock the Notifications