ரெடி-கோ காருக்கு முன்பே டட்சன் கோக்ராஸ் எஸ்யூவி அறிமுகம்... பரபரப்பு தகவல்கள்!!

By Saravana

டட்சன் ரெடி-கோ காருக்கு முன்பே, டட்சன் கோக்ராஸ் மினி எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் டோக்கியோ மோட்டார் ஷோவில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய டட்சன் கார் விரைவாகவே இந்திய மார்க்கெட்டில் தடம்பதிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மினி எஸ்யூவி

மினி எஸ்யூவி

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட டட்சன் கோக்ராஸ் மினி எஸ்யூவி ரகத்தில் மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தோற்றம்

தோற்றம்

க்ராஸ்ஓவர் டிசைன் தாத்பரியத்தில் உருவாகியிருக்கும் இந்த கார் வாடிக்கையாளர்களை நிச்சயம் வசீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசைன் மிகவும் வலுவான மாடலாக தோற்றமளிக்கிறது. அலாய் வீஸ்கள், எஸ்யூவி மாடலுக்கான பக்கவாட்டு பாடி கிளாடிங்குகள், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், ஸ்கிட் பிளேட் போன்றவற்றின் மூலமாக இதனை எஸ்யூவி ஸ்டைல் மாடலாக எடுத்துக் காட்டுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

டட்சன் கோ மற்றும் கோப்ளஸ் மினி எம்பிவி கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதே பெட்ரோல் எஞ்சின் இந்த புதிய மாடலில் பொருத்தப்பட்டு இருக்கும்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

ரெனோ- நிசான் கூட்டணியின் CMF- A பிளாட்ஃபார்மில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், கோ மற்றும் கோப்ளஸ் கார்களில் பயன்படுத்தப்படிருக்கும் பெரும்பாலான உதிரிபாகங்களை இந்த கார் பங்கிட்டுக் கொள்ளும். எனவே, விரைவாகவே தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மார்க்கெட்

மார்க்கெட்

இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய வளர்ந்து வரும் கார் மார்க்கெட்டுகளில் டட்சன் பிராண்டு தயாரிப்புகளை சந்தைப்படுத்த நிசான் திட்டமிட்டிருக்கிறது. அதில், டட்சன் பிராண்டுக்கு இந்தியா மிக முக்கியமான மார்க்கெட்டாக இருக்கும் என்று நிசான் குறிப்பிட்டிருக்கிறது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

டட்சன் கோக்ராஸ் காரை சென்னையிலுள்ள ஆலையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நிசான் திட்டமிட்டு இருக்கிறது.

இந்திய பிரவேசம்

இந்திய பிரவேசம்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய காரின் தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத்தொடர்ந்து, சில மாதங்களில் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது.

7 சீட்டர்

7 சீட்டர்

முதலில் 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடனும், பின்னர் இதன் 7 சீட்டர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Datsun could be launching the GoCross ahead of the Redi-GO in the Indian market. The GoCross is a crossover model while the Redi-GO is an affordable hatchback by Datsun. Both models have been showcased in concept guise.
Story first published: Monday, November 16, 2015, 9:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X