இன்னோவாவுக்கு புதிய இன்டிரியர் கஸ்டமைஸ் பேக்கேஜ்... எல்லாம் இன்பமயம்!

By Saravana

இன்னோவாவுக்கு அவ்வப்போது புதிய கஸ்டமைஸ் பேக்கேஜ்களை டிசி டிசைன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், மிக நவீனமான இன்டிரியர் பேக்கேஜை இன்னோவாவுக்கு வழங்குகிறது டிசி.

மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் விதத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய கஸ்டமைஸ் பேக்கேஜ் விபரங்களை ஸ்லைடரில் படங்களுடன் காணலாம்.


அம்சமான இன்டிரியர்

அம்சமான இன்டிரியர்

விமான இன்டிரியரை போன்ற மெல்லிய விளக்கொளிகள் இணைந்த உள்பக்க கூரை அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஓட்டுனர் வரிசை இருக்கைக்கும், பயணிகள் அமரும் பகுதிக்கும் தடுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பாதுகாப்பும், நிம்மதியான பயணத்தையும் பெறலாம்.

கேப்டன் சீட்

கேப்டன் சீட்

எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட 24இன்ச் கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை 150 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ள முடியும். இவை உயர்தர லெதர் இருக்கைகள் என்பதால் மிக சொகுசான அனுபவத்தை வழங்கும். பின்புற கேபினில் இரண்டு இரு்ககைகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், காரில் ஏறுவதும், இறங்குவதும் எளிதாக இருக்கும் வகையில் இருக்கைகள் பொருத்தப்பட்டு அதிக இடவசதி உள்ளது.

இதர வசதிகள்

இதர வசதிகள்

  1. 22 இன்ச் எல்இடி டிவி
  2. ஐ-பாட் தொடர்பு செய்து கொள்ளும் வசதி கொண்ட டிவிடி ப்ளேயர்
  3. இன்டர்காம்
  4. முன்புற கேமரா மற்றும் ரிவர்ஸ் கேமரா
அலங்காரம்

அலங்காரம்

அலங்கார மரத்தகடுகள் மூலம் கதவுகள் மிளிருகின்றன. மேலும், கன்ட்ரோல் சுவிட்சுகளும் கதவுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

கட்டண விபரம்

கட்டண விபரம்

இந்த புதிய இன்டிரியர் பேக்கேஜுக்கான கட்டண விபரம் வெளியிடப்படவில்லை. ரூ.8 லட்சம் வரை இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 11, 2015, 11:18 [IST]
English summary
DC designs has Introduced new customisation package for Toyota innova.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+