பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு முகத்தில் இருப்பதால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாதத்தில் இரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

இந்தநிலையில், கச்சா எண்ணெய் விலை சரிவு முகத்தில் இருப்பதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








