பீட்சா டெலிவரி செய்யும் பிரத்யேகமான ஷெவ்ரோலே கார்!

By Ravichandran

பீட்சா டெலிவரி செய்வதற்காக பிரத்யேகமான காரை ஷெவ்ரோலே அறிமுகம் செய்துள்ளது.

டோமினோஸ் பீட்சா நிறுவனத்திற்காக இந்த விசேஷ ஸ்பார்க் கார் மாடலை [இந்தியாவில் பீட் என்று அழைக்கப்படுகிறது] ஷெவ்ரோலே நிறுவனம், உருவாக்கி தந்துள்ளது.

டோமினோஸ் இன்னோவேடிவ் டிஎக்ஸ்பி அழைக்கப்படும் இந்த காரின் விசேஷ அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

இடவசதி

இடவசதி

இதன் மூலம், ஒரு முறைக்கு 80 பீட்சாக்கள் வரை டெலிவிரி செய்ய முடியும். விலைமதிப்பற்ற உணவு பொருட்களை இடம் மாற்றுவதற்கு தகுந்த வகையில், இந்த டாமினோஸ் டெலிவரி ஷெவ்ரோலே (ஷெவி) காரில் மிகவும் உயர் தரமான இண்டீரியர்கள் உள்ளன. இதன் வகையில், அதிகமான பொருட்கள் இடம் மாற்றம் செய்யக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது.

வசதிகள்

வசதிகள்

இந்த டோமினோஸ் இன்னோவேடிவ் டிஎக்ஸ்பி காரில், சாவி கொத்து மூலம் இயக்ககூடிய இல்லூமினேடட் வார்மிங் ஓவன், விசேஷ பூச்சு கொண்ட கேபின், சுத்தம் செய்ய எளிமையாக உள்ள உலோக பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பீட்சா தவிர்த்து, அதற்குண்டான சேலட்கள், விங்ஸ், சாஸ் மற்றும் சோடா மற்றும் குளிர்பானங்கள் வைப்பதற்கு என தனித்தனி பெட்டிகள் போன்ற அமைப்புகள் உள்ளன.

அடையாளம்

அடையாளம்

டோமினோஸ் நிறுவனத்தின் பிரத்யேக கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் இந்த காரின் வெளிப்புறம் கவர்ச்சியாக உள்ளது. பீட்சா தயாரிப்பு நிறுவனமான டோமினோஸின் லோகோ-வுடன் கூடிய விளக்கு உள்ளது.

கஸ்டமைஸ் மாடல்

கஸ்டமைஸ் மாடல்

டோமினோஸ் நிறுவனம் ரவுஷ் எண்டர்பிரைசஸ் எனப்படும் நிறுவனத்துடன் இணைந்து, இதேபோல் 100 டாமினோஸ் டிஎக்ஸ்பி வாகனங்களை தயாரித்து, அமெரிக்கா முழுவதும் 25 சந்தைகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

விலை மதிப்பு

விலை மதிப்பு

டாமினோஸ் டெலிவரி ஷெவ்ரோலே (ஷெவி) காரின் விலை 20,000 முதல் 25,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 14 முதல் 16 லட்சம் ரூபாய்) விலையில் விற்கபடுகிறது.

இந்தியாவிற்கும் இத்தகைய பீட்சா டெலிவரி கார்கள் தேவையா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 27, 2015, 15:28 [IST]
English summary
Dominos Innovative DXP - The Customised Pizza Delivery Car launched. This Pizza delivery vehicle, which is designed based on the Chevrolet Spark, can transport up to 80 pizzas in a single run.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+