இந்த ஆண்டில் அறிமுகமான சிறந்த 10 புதிய கார் மாடல்கள்!

By Saravana

சந்தைப் போட்டி அதிகரித்திருப்பதால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் புதிய மற்றும் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதுதவிர்த்து, ஸ்பெஷல் எடிசன், லிமிடேட் எடிசன் மாடல்களும் வரிசை கட்டின. இது ஆரோக்கியமான போட்டியை நோக்கி இந்திய மார்க்கெட்டை அழைத்துச் செல்வதுடன், வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த காரை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த 10 புதிய கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 10. டட்சன் கோ -ப்ளஸ்

10. டட்சன் கோ -ப்ளஸ்

எம்பிவி ரக கார்கள் இடவசதிக்கானது என்ற பொதுவான கருத்தை, டட்சன் கோ ப்ளஸ் உடைத்தது. மிக மிக குறைவான விலையில், 4 மீட்டர் நீளத்துக்குள் வடிவமைக்கப்பட்ட ஓர் 7 சீட்டர் மாடலாக டட்சன் கோ ப்ளஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முழுமையான 7 சீட்டர் காராக கூற முடியாவிட்டாலும், பட்ஜெட் விலையில் ஓர் தாராளமான இடவசதியுடன் நெருக்கடியான ஹேட்ச்பேக் கார்களுக்கான மாற்றான மாடலாக கூறலாம்.

 கோ ப்ளஸ் சிறப்புகள்

கோ ப்ளஸ் சிறப்புகள்

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நீளம் குறைவாக இருப்பதால், பார்க்கிங் செய்வதற்கும், ஓட்டுவதற்கும் எளிது. ஆனால், பாதுகாப்பு அம்சங்களில் நிறைவில்லாததால், பின்தங்கி நிற்கிறது. இந்த காரை பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள எமது டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் செய்தித் தொகுப்பிற்கு வாருங்கள்.

டட்சன் கோ ப்ளஸ் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

 09. ஃபியட் அபார்த் புன்ட்டோ

09. ஃபியட் அபார்த் புன்ட்டோ

அதிசெயல்திறன் மிக்க கார்களை அபார்த் என்ற பிரத்யேக பெயரில் ஃபியட் விற்பனை செய்து வருவது உங்களுக்கு தெரிந்ததே. அந்த பிராண்டில் இந்தியாவில், இரண்டாவது மாடலாக புன்ட்டோ காரின் செயல்திறன் மிக்க அபார்த் புன்ட்டோ காரை ஃபியட் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவின் மிக அதிக பவர் கொண்ட ஹேட்ச்பேக் கார் இதுதான்.

 அபார்த் புன்ட்டோ சிறப்புகள்

அபார்த் புன்ட்டோ சிறப்புகள்

அதிகபட்சமாக 145 பிஎச்பி பவரை அளிக்கும் டர்போசார்ஜர் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், வலுவான சஸ்பென்ஷன் அமைப்பு, டிசைனில் கூடுதல் சிறப்பம்சங்களுடன், பெர்ஃபார்மென்ஸ் ரக கார்களை விரும்புவோர்க்கு சரியான விலையிலான சிறப்பான சாய்ஸ். ரூ.9.95 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

 08. மாருதி எஸ் க்ராஸ்

08. மாருதி எஸ் க்ராஸ்

மாருதியின் துவங்கிய நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் மாருதி எஸ் க்ராஸ். இந்த க்ராஸ்ஓவர் ரக கார் மாடல் ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகளுடன் போட்டி போடுகிறது. மேலும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தவிரவும், வசதிகளிலும் நிறைவாகவே வந்தது.

எஸ் க்ராஸ் சிறப்புகள்

எஸ் க்ராஸ் சிறப்புகள்

எனினும், மாருதி கார்கள் என்றாலே விலை மிக சரியாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்த்து நம்பியிருந்த வாடிக்கையாளர்களை இந்த எஸ் க்ராஸ் சற்று ஏமாற்றியது. இதனால், இதனைவிட தோற்றத்தில் அசத்தலாக வந்த ஹூண்டாய் க்ரெட்டா பக்கம் வாடிக்கையாளர்கள் திரும்பிவிட்டனர். எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. எனவே, எஸ் க்ராஸ் விற்பனையை தூக்கி நிறுத்துவதற்கு, தொடர்ந்து இந்த காருக்கு அதிரடி சேமிப்புச் சலுகைகளை மாருதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 07. ஹோண்டா ஜாஸ்

07. ஹோண்டா ஜாஸ்

முந்தைய ஜாஸ் காரின் விலையை அதிகமாக நிர்ணயித்து சூடுபட்டுக் கொண்ட ஹோண்டா கார் நிறுவனம், புதிய டிசைன், வசதிகளுடன் புதிய தலைமுறை ஜாஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் தவிர்த்து, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஜாஸ் சிறப்புகள்

ஜாஸ் சிறப்புகள்

விற்பனைக்கு வந்த முதல் இரண்டு மாதங்கள் இந்தியாவின் டாப் 10 கார் மாடல்களின் பட்டியலில் அதிரடியாக இடம்பிடித்தாலும், தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைக்கவில்லை. ஹூண்டாய் எலைட் ஐ10யின் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுடன், மாருதி பலேனோ வரவும் இந்த காரை அந்த பட்டியலில் இருந்து இறக்கிவிட்டன. இருந்தாலும், ஹோண்டாவின் ஓர் நம்பகமான தயாரிப்பு என்று கூறலாம். ஒரே குறை, அதிகப்படியாக விலை நிர்ணயிக்கப்பட்ட மாடல் என்ற கருத்தே, வாடிக்கையாளர்களை பிற மாடல்கள் மீது கவனத்தை திசை திருப்ப வைத்துவிட்டது.

 06. ஃபோர்டு ஆஸ்பயர்

06. ஃபோர்டு ஆஸ்பயர்

நடுத்தர வர்க்கத்தினரின் செடான் கார் ஆசையை நிறைவேற்றி வைக்கும் காம்பேக்ட் செடான் கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும், மாருதி டிசையரின் இமாலய விற்பனை எண்ணிக்கையும், அனைத்து நிறுவனங்களையும் இந்த செக்மென்ட்டில் நுழைய தூண்டி வருகிறது. அந்த வகையில், ஃபோர்டு நிறுவனம் களமிறக்கிய காம்பேக்ட் செடான் கார் ஆஸ்பயர். பெட்ரோல், டீசல் எஞ்சின் மாடல்களில் வந்ததோடு, டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆஸ்பயர் சிறப்புகள்

ஆஸ்பயர் சிறப்புகள்

சிறப்பான இடவசதி, பாதுகாப்பு வசதிகள், அவசர கால தொடர்பு வசதிகள் என இந்த செக்மென்ட்டில் சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக வலம் வருகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் சர்வீஸ் பில்லை நினைத்துதான் பலர் இந்த காரை தவிர்க்க முடியுமே தவிர, அதிக குறை சொல்லமுடியாத சிறந்த மாடலாகவே கூறலாம்.

ஃபோர்டு ஆஸ்பயர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

05. மாருதி பலேனோ

05. மாருதி பலேனோ

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் விற்பனையை பார்த்து அசந்துபோன மாருதி, ஸ்விஃப்ட்டை நம்பியிருக்க கூடாது என்ற எண்ணத்தில் கூடுதல் பிரிமியம் ரக மாடலாக மாருதி பலேனோவை களமிறக்கியது. பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தில் வந்த இந்த காரும் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகவே விற்பனை செய்யப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்திருப்பதும், மைலேஜ், இடசவசதி, வசதிகளில் நிறைவான மாடலாகவும் வந்துள்ளது.

பலேனோ சிறப்புகள்

பலேனோ சிறப்புகள்

போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் மாருதி பலேனோ அறிமுகம் செய்யப்பட்டதால், ஓரளவு நல்ல விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஆனால், ஸ்விஃப்ட்டைவிட சிறப்பான தோற்றத்தை கொண்டிருப்பதும், விலையிலும் தோதுவாக இருப்பதும், ஸ்விஃப்ட் விற்பனையில் பெரும் அடியை விழச் செய்திருக்கிறது. பிரிமியம் ஹேட்ச்பேக் என்ற அந்தஸ்தும் வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது.

 04. மஹிந்திரா டியூவி300

04. மஹிந்திரா டியூவி300

எமது தொகுப்பில் 4வது மாடலாக மஹிந்திரா டியூவி300 இடம்பெற்றிருக்கிறது. பீரங்கியை மனதில் வைத்து ஓர் சிறந்த கட்டமைப்பு கொண்ட எஸ்யூவி மாடலாக இதனை உருவாக்கியிருப்பதாக மஹிந்திரா தெரிவிக்கிறது. அனைவரையும் இதன் டிசைன் கவராது என்றாலும், சரியான விலையில் ஓர் சிறந்த எஸ்யூவி மாடலாக கூறலாம்.

சிறப்புகள்

சிறப்புகள்

4 மீட்டர் நீளத்துக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடல் சிறப்பான இடவசதியை வழங்குவதுடன், கடைசி வரிசையில் இரண்டு ஜம்ப் இருக்கைகளை போட்டு 7 சீட்டராக மாற்றிக் கொள்ளலாம் என்பது மிகப்பெரிய ப்ளஸ்பாயிண்ட். விற்பனையிலும் சிறப்பாக இருந்து வருகிறது.

03. ஃபோர்டு ஃபிகோ

03. ஃபோர்டு ஃபிகோ

நம் நாட்டில் அழகான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று என்று பெயரெடுத்த ஃபிகோ பிராண்டில் புதிய தலைமுறை மாடலை சில மாதங்களுக்கு முன் ஃபோர்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. சிறந்த கட்டுமானம், வசதிகள் என அனைத்திலும் நிறைவான மாடலாக வலம் வருகிறது.

சிறப்புகள்

சிறப்புகள்

பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கும் புதிய ஃபிகோ கார் பட்ஜெட் விலையில் ஓர் சிறந்த பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலாக கூறலாம். அதிக சக்திவாய்ந்த எஞ்சின்கள், தொடர்பு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் சிறப்பான மாடல்.

புதிய ஃபோர்டு ஃபிகோ டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

02. ரெனோ க்விட்

02. ரெனோ க்விட்

இந்தியாவின் சூப்பர்டூப்பர் ஹிட் மாடல் என்ற பெருமையை ரெனோ க்விட் பெற்றிருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத, ஏன் ரெனோ கார் நிறுவனமே எதிர்பார்க்காத அளவு வரவேற்பை பெற்றிருப்பதுடன், இதுவரை 70,000க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருக்கிறது. இதன் டிசைன்தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும், இடவசதி, வசதிகள் என அனைத்திலும் நிறைவான கார் மாடலாக வலம் வருகிறது.

சிறப்புகள்

சிறப்புகள்

ரெனோ க்விட் வெற்றிக்கு டிசைன், வசதிகள், மைலேஜ் என்று ஒரு பக்கம் இருந்தாலும், மிக குறைவான விலை என்பதும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. 800சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் ரெனோ க்விட் கார் விரைவில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காரின் முழுமையான விபரங்களை கீழே உள்ள எமது டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் பகுதியில் சென்று படிக்கலாம்.

ரெனோ க்விட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

01. ஹூண்டாய் க்ரெட்டா

01. ஹூண்டாய் க்ரெட்டா

ரெனோ க்விட் போன்றே ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற மாடல் ஹூண்டாய் க்ரெட்டா. இதுவரை 75,000க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்று அசத்தியிருக்கிறது. சாலைகளிலும் கணிசமான அளவு காண முடியும் இந்த எஸ்யூவியின் வெற்றிருக்கு முதல் காரணம் மிகச்சிறப்பான டிசைன்தான்.

 சிறப்புகள்

சிறப்புகள்

டிசைன் என்பதோடு, பல வித எஞ்சின் ஆப்ஷன்கள், வசதிகள், அந்தஸ்தை கூட்டும் தோற்றம் என்று கவர்ந்து வருகிறது. மேலும், எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திராவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரும் மாடலாகவும் விளங்குகிறது.

 இந்த ஆண்டில் அறிமுகமான சிறந்த 10 புதிய கார் மாடல்கள்!

இங்கே இடம்பெற்ற பெரும்பாலான புதிய கார் அறிமுக நிகழ்ச்சிகளை எமது சிறப்பு நிருபர்கள் மூலமாக நேரடியாக வாசகர்களுக்கு உடனுக்குடன் டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்கி வருவதை நினைவு கூற விரும்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 24, 2015, 12:16 [IST]
English summary
we take a look at 10 of the best car launches that happened in 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+