இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஃபெராரி மாடல்களும், அதன் விலை விபரமும்!

Posted By:

2011ம் ஆண்டு இந்தியாவில் ஃபெராரி கார் நிறுவனம் நேரடி வர்த்தகத்தை துவங்கியது. ஷ்ரேயான்ஸ் நிறுவனத்தை நேரடி இறக்குமதியாளராக நியமித்தது. ஆனால், சர்வீஸ் சரியில்லை, டெலிவிரியில் குளறுபடிகள் காரணமாக, ஷ்ரேயான்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த இறக்குமதி அங்கீகாத்தை ரத்து செய்தது.

இதைத்தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் கார் வர்த்தகத்தை ஃபெராரி நிறுவனம் மீண்டும் புதுப்பித்தது. டெல்லியில், செலக்ட் கார் நிறுவனத்தையும், மும்பையில் நவனீத் நிறுவனத்தையும் டீலர்களாக நியமித்து நேரடி வர்த்தகத்தை துவங்கியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஃபெராரி கார் மாடல்களின் விபரம் மற்றும் அதன் விலை விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

01. ஃபெராரி கலிஃபோர்னியா டி

01. ஃபெராரி கலிஃபோர்னியா டி

இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஃபெராரி நிறுவனத்தின் விலை குறைவான மாடல் இதுதான். இந்த காரில் 560 பிஸ் பவரையும், 755 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 3.9 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின் உள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 315 கிமீ வேகத்தை தொடக்கூடிய வல்லமை கொண்டது. ஃபெராரி கலிஃபோர்னியா டி கார் மாடல் ரூ.3.30 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

02. ஃபெராரி 488 ஜிடிபி கூபே

02. ஃபெராரி 488 ஜிடிபி கூபே

விலைப்பட்டியலின்படி, குறைவான விலை கொண்ட இரண்டாவது மாடல் ஃபெராரி 488 ஜிடிபி கூபே. இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட அனைத்து மாடல்களுக்கும் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த காரில் இருக்கும் புதிதாக பொருத்தப்பட்ட 3.9 லிட்டர் எஞ்சின் 661 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க்கையும் வழங்கும். முந்தைய 4.5 லிட்டர் வி8 எஞ்சினைவிட இது மிகவும் சக்திவாய்ந்தது. மணிக்கு 323 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய வல்லமை கொண்ட மாடல். ரூ.3.84 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

03. ஃபெராரி 458 ஸ்பைடர்

03. ஃபெராரி 458 ஸ்பைடர்

2011ம் ஆண்டு பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 1,500 முதல் 2,000 ஃபெராரி 458 ஸ்பைடர் கார்களை தயாரிக்க ஃபெராரி திட்டமிட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஃபெராரி 458 ஸ்பைடர் மாடலில் இருக்கும் 4.5 லிட்டர் வி8 எஞ்சின் 570 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தை எட்டிப்பிடிக்க வல்லது. இந்த கார் ரூ.4.07 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

 04. ஃபெராரி 458 ஸ்பெஷல்

04. ஃபெராரி 458 ஸ்பெஷல்

ஃபெராரி ஸ்குடேரியாவிற்கு மாற்றாக வந்த மாடல். இந்த காருக்கான பிரத்யேக ஏரோடைனமிக்ஸ் ஆக்சஸெரீகளை ஃபெராரி நிறுவனத்தின் டிசைன் ஸ்டூடியோவும், இத்தாலியின் பிரபல டிசைன் நிறுவனமான பினின்பரீனாவும் இணைந்து டிசைன் செய்தன. இந்த காரில் இருக்கும் 4.5 லிட்டர் எஞ்சின் 597 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க்கையும் வழங்கும். மணிக்கு 325 கிமீ வேகம் வரை தொடக்கூடிய ஆற்றல் கொண்டது. ரூ.4.25 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

05. ஃபெராரி எஃப்-12 பெர்லினேட்டா

05. ஃபெராரி எஃப்-12 பெர்லினேட்டா

இப்போதைக்கு இதுதான் இந்தியாவில் ஃபெராரி நிறுவனத்தின் அதிக விலை கொண்ட மாடல். ஃபெராரி 599 ஜிடிபி மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.பெர்லினேட்டா என்றால் இத்தாலிய மொழியில் லிமோசின் என்று அர்த்தமாம். இந்த காரில் இருக்கும் 6.3 லிட்டர் எஞ்சின் 729 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு அதிகபட்சமாக 339 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இந்த கார் ரூ.4.72 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

 

Source: Zigwheels

மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
Ferrari re-enters Indian car market; price list revealed.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark