ஃபெராரி நிறுவனத்தின், புதிய ஷோரூம் டெல்லியில் திறக்கபட்டுள்ளது
ஃபெராரி நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் சார்பாக புதிய ஷோரூமை டெல்லியில் திறந்துள்ளனர்.
இத்தாலிய கார் நிறுவனமான ஃபெராரி, இந்தியாவில் தங்களது விற்பனையை மீண்டும் துவங்கியுள்ளனர். இந்தியாவில் தங்களது தடத்தை விரிவுபடுத்தும் நோக்கில், நேற்று டெல்லியில் புதிய ஷோரூமை திறந்துள்ளது.
செலக்ட் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம், இந்த ஃபெராரி ஷோரூம் நிறுவபட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில், ஃபெராரி நிறுவனத்தின் உயர் அதிகாரி என்ரிகோ கல்லீரா-வும், செலக்ட் கார்ஸ் டீலர்ஷிப்-பின் டைரக்டருமான யாதுர் கபூர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஃபெராரி ஷோரூமில், கார்கள் மட்டுமல்லாது, ஃபெராரி தயாரிப்புகள் தொடர்பான ஆக்ஸசரீஸ் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். இங்கு வாடிக்கையாளர்கள் தங்களின் ஃபெராரி கார்களை, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்புகள் வழங்கபடுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் அனைத்து மாடல்களும், இந்த ஃபெராரி ஷோருமில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கபட்டுள்ளது. என்ன மாடல்கள்,
எந்த விலையில் கிடைக்கின்றது என பார்க்கலாம்.
ஃபெராரி கலிஃபோர்னியா டி ; 3.45 கோடி ரூபாய்
ஃபெராரி 488 ஜிடிபி ; 3.99 கோடி ரூபாய்
ஃபெராரி 458 ஸ்பைடர் ; 4.22 கோடி ரூபாய்
ஃபெராரி 458 ஸ்பெசியல் ; 4.40 கோடி ரூபாய்
ஃபெராரி எஃப் பெர்லினெட்டா ; 4.87 கோடி ரூபாய்
மேற்குறிப்பிடபட்டுள்ள அனைத்து விலைகளும், இந்தியா முழுவதும் எக்ஸ்-ஷோரூம் விலையே என்பது குறிப்பிடதக்கது.

செலக்ட் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் அமைக்கபட்டுள்ள இந்த ஷோரூம் தான் டெல்லியில் இருக்கும் ஒரே ஃபெராரி ஷோரூம் என்பது குறிப்பிடதக்கது.
டெல்லியில் உள்ள இந்த ஃபெராரி ஷோரூம் முகவரி;
ஏ-19, மோஹன் கோ-ஆப்பரேட்டிவ் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ்,
டெல்லி.
A-19, Mohan Co-Operative Industrial Estates,
Delhi.
இந்த ஷோரூம் திறப்பு தொடர்பான செய்திகளை பார்க்க, இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்...


Click it and Unblock the Notifications