ஃபெராரி நிறுவனத்தின், புதிய ஷோரூம் மும்பையில் திறக்கபட்டுள்ளது

Written By:

ஃபெராரி நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் புதிய ஷோரூமை மும்பையில் திறந்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் கார் விற்பனையை துவங்கியிருக்கும் அந்த நிறுவனம் டெல்லியில் நேற்று புதிய கார் ஷோரூமை திறந்தது. இந்த நிலையில், இந்தியாவில் இரண்டாவது புதிய கார் ஷோருமை இன்று மும்பையில் திறந்திருக்கிறது.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் சந்தை, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றது. அத்துடன் சொகுசு கார்களின் சந்தையும் சமமாக விரிவடைந்து வருகின்றது. இந்திய சொகுசு கார் நிறுவனங்களும், அயல்நாட்டு சொகுசு கார் நிறுவனங்களும் இந்தியாவில் தங்களின் தடத்தை விரிவாக்கம் செய்து வருகின்றன.

மும்பையில் திறக்கபட்டுள்ள புதிய ஃபெராரி ஷோரூம் குறித்த விவரங்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஷோரூம் திறப்பு விழா;

ஷோரூம் திறப்பு விழா;

நவ்னீத் மோட்டார்ஸ் டீலர்ஷிப் ஸ்தாபித்துள்ள இந்த ஃபெராரி ஷோரூம் திறப்பு விழாவில், ஃபெராரி நிறுவனத்தின் உயர் அதிகாரி என்ரிகோ கல்லீரா-வும் பங்கு கொண்டார்.

ஷோரும் திறக்கபட்ட நாள்;

ஷோரும் திறக்கபட்ட நாள்;

இத்தாலிய கார் நிறுவனமான, ஃபெராரியின் புதிய ஷோரூம், இன்று (1-12-15) திறக்கபட்டுள்ளது.

ஷோரும் முகவரி;

ஷோரும் முகவரி;

நவ்னீத் மோட்டார்ஸ் என்ற டீலர்ஷிப் மூலமாக நிறுவபட்டுள்ள, ஃபெராரியின் இந்த புதிய ஷோரூம் அமைந்திருக்கும் முகவரி;

ஜி-2, ப்ளாடினா பில்டிங்,

பேன்ட்ரா குர்லா காம்பிளக்ஸ்,

மும்பை.

G-2, Platina building,

Bandra Kurla Complex,

Mumbai.

முதல் வாடிக்கையாளருக்கு சாவி வழங்கல்;

முதல் வாடிக்கையாளருக்கு சாவி வழங்கல்;

இந்த புதிய ஃபெராரி ஷோருமில், முதல் வாடிக்கையாளராக, முதல் ஃபெராரி காரை வாங்கியவருக்கு ஃபெராரி நிறுவனத்தின் உயர் அதிகாரி என்ரிகோ கல்லீரா, தாமே முன் இருந்து ஃபெராரி கலிஃபோர்னியா டி மாடல் காரின் சாவியை வழங்கி சிறப்பித்தார்.

கார் மற்றும் ஆக்சஸரீஸ்;

கார் மற்றும் ஆக்சஸரீஸ்;

மும்பையில் திறக்கபட்டுள்ள புதிய ஃபெராரி ஷோரூமில், ஃபெராரி கார்கள் மட்டுமின்றி, அவற்றின் தொடர்பான ஆக்சஸரீஸ்களும் விற்கபடுகிறது.

ஏற்கனவே உள்ள ஃபெராரி வாடிக்கையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுகும், இங்கு உயர்ரக வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுகிறது.

கிடைக்கும் கார்கள் மற்றும் விலைகள்;

கிடைக்கும் கார்கள் மற்றும் விலைகள்;

இந்த ஃபெராரி ஷோருமில், இந்தியாவில் கிடைக்கும் அனைத்து மாடல்களும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. என்ன என்ன மாடல்கள் எந்த விலையில் கிடைக்கின்றது என தெரிந்து கொள்வோம்.

ஃபெராரி கலிஃபோர்னியா டி ; 3.45 கோடி ரூபாய்

ஃபெராரி 488 ஜிடிபி ; 3.99 கோடி ரூபாய்

ஃபெராரி 458 ஸ்பைடர் ; 4.22 கோடி ரூபாய்

ஃபெராரி 458 ஸ்பெசியல் ; 4.40 கோடி ரூபாய்

ஃபெராரி எஃப் பெர்லினெட்டா ; 4.87 கோடி ரூபாய்

முக்கிய குறிப்பு ; மேற்குறிப்பிடபட்டுள்ள அனைத்து விலைகளும், இந்தியா முழுவதும் எக்ஸ்-ஷோரூம் விலையே என்பது குறிப்பிடதக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தஃபெராரி நிறுவனத்தின், புதிய ஷோரூம் திறப்பு தொடர்பான செய்திக்ளை பற்றி தெரிந்து கொள்ள... இந்த இணைப்பை கிளிக் செய்யவும்...

ஃபெராரி நிறுவனத்தின், புதிய ஷோரூம் டெல்லியில் திறக்கபட்டுள்ளது

English summary
Ferrari has Inaugurated new Showroom In Mumbai. As the Indian Luxury Car market is in boom, Ferrari is widening its presence in India by opening new Showrooms. Latest of those list is, the new Ferrari Showroom opened by Navnit Motors in Bandra Kurla Complex, Mumbai.
Please Wait while comments are loading...

Latest Photos